பார்லி.,கூட்டம் எப்போது அரசு தீவிர ஆலோசனை

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :அனைத்து, எம்.பி.,க்களும் நேரில் பங்கேற்கும் வகையில், பார்லி.,யின் மழைக்கால கூட்டத் தொடரை, ஆக., இறுதி வாரம் அல்லது செப்., முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஆலோசனையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.கொரனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கால், பார்லியின் கூட்டத் தொடரை நடத்த முடியாத நிலை உள்ளது. 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
 பார்லி., கூட்டம் , அரசு தீவிர ஆலோசனை

புதுடில்லி :அனைத்து, எம்.பி.,க்களும் நேரில் பங்கேற்கும் வகையில், பார்லி.,யின் மழைக்கால கூட்டத் தொடரை, ஆக., இறுதி வாரம் அல்லது செப்., முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஆலோசனையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.கொரனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கால், பார்லியின் கூட்டத் தொடரை நடத்த முடியாத நிலை உள்ளது. 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இது குறித்து, பார்லிமென்ட் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

பார்லி.,யின் பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப்., 3 வரை நடப்பதாக இருந்தது. ஆனால், மார்ச், 23ல், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பார்லி., விதிகளின்படி, ஒரு கூட்டத் தொடர் முடிந்த, ஆறு மாதத்துக்குள், அடுத்தக் கூட்டத் தொடரை நடந்த வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில், அனைத்து, எம்.பி.,க்களும் நேரில் பங்கேற்கும் வகையில், பார்லி., கூட்டத் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. பல முக்கிய அவசர சட்டங்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதனால், முழு கூட்டத் தொடராக நடத்தப்படும் என, எதிர்பார்க்கலாம்.

இது தொடர்பாக, லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லா, ராஜ்யசபாவின் தலைவரான, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், கூட்டத் தொடரை நடத்த அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்திக் கொள்வது குறித்து அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

லோக்சபாவுக்கான கூட்டத்தை, மைய மண்டபத்திலும், ராஜ்யசபா கூட்டத்தை, லோக்சபா அரங்கிலும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எப்படி இருந்தாலும், செப்., 23க்கு முன்பாகவே, கூட்டத் தொடர் நடத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
02-ஜூலை-202013:50:19 IST Report Abuse
J.Isaac இப்பொழுது உள்ள சூழ்நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி ஆட்சி கொண்டுவந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபடலாம்.
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
02-ஜூலை-202012:21:48 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் எதற்கு தண்ட செலவு எப்படியம் அரசு வானத்தை வில்லாக வளைத்து விட்டோம், சீன வை ஓட விட்டோம் என்று சொல்ல போகிறார்கள், இதற்கு CONFRENSE CALL வைத்து முடித்து விடலாமே செலவு ஆவது மிச்சம் ஆகும்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஜூலை-202010:03:50 IST Report Abuse
Lion Drsekar தற்போதைய நிலையே நீடித்தால் நல்லது , ஆக்கபூர்வமாக செயல்பட்டால் அவர்களுக்ககா செய்யப்படும் போக்குவரத்து கைப்பிடி அந்த செலவு இந்த செலவு பல லட்சம் மிச்சமாகும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X