ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா': பீதியில் தனிமைப்படுத்தப்பட்ட ஆடுகள்..!

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் ஆடு மேய்க்கும் நபருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவரது பராமரிப்பில் இருந்த 50 ஆடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் தும்கூர் அடுத்த கோல்லாரஹட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கோடிகேரே கிராமத்தை சேர்ந்த மக்கள், சில ஆடுகளுக்கு சுவாசிப்பதில் பிரச்னை இருப்பதாக பீதியடைந்ததை அடுத்து ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடை

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: கர்நாடகாவில் ஆடு மேய்க்கும் நபருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவரது பராமரிப்பில் இருந்த 50 ஆடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.



latest tamil news


கர்நாடக மாநிலம் தும்கூர் அடுத்த கோல்லாரஹட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கோடிகேரே கிராமத்தை சேர்ந்த மக்கள், சில ஆடுகளுக்கு சுவாசிப்பதில் பிரச்னை இருப்பதாக பீதியடைந்ததை அடுத்து ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடு மேய்ப்பவரின் பராமரிப்பில் இருந்த சில ஆடுகளுக்கு சுவாசிப்பதில் பிரச்னையை ஏற்பட்டுள்ளது. இப்போது எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று பயம் இருப்பதால், ஆடுகளுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்கலாமென மக்கள் பயப்படுகிறார்களென கர்நாடக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி பி.டி.ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கிராம மக்கள், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜே.சி. மதுசுவாமி உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


latest tamil news


அமைச்சரின் உத்தரவை அடுத்து கோடிகேரே கிராமத்திற்கு விரைந்த கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட்ட ஆடுகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்தனர். ஆடு பிளேக் என்றும் அழைக்கப்படும் பெஸ்டே டெஸ் பெட்டிட்ஸ் ரூமினண்ட்ஸ் (பிபிஆர்) மற்றும் மைக்கோ பிளாஸ்மா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாமென கால்நடை நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

'ஆடுகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள், போபாலில் உள்ள விலங்கு சுகாதார மற்றும் கால்நடை உயிரியல் மற்றும் கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை ஆடுகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக பதிவாகவில்லை. பிபிஆர் மற்றும் மைக்கோபிளாஸ்மாவும் தொற்றுநோய்கள் என்பதால், பிற விலங்குகளுக்கும் பரவக்கூடும் எனவே, ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன' என கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202005:30:53 IST Report Abuse
ஆப்பு ஆடுகள்தானே... போட்டுத் தள்ளிரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X