அரசியல் செய்தி

தமிழ்நாடு

'களத்தில் காணாமல் போனவர் வீட்டில் கபடி ஆடுகிறார்'

Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 'களத்தில் காணாமல் போனவர்   வீட்டில் கபடி ஆடுகிறார்'

சென்னை; ''நோய் தொற்று காலத்தில், களத்தில் காணாமல் போன தலைவர், வீட்டில் கபடி ஆடிக் கொண்டிருக்கிறார்,'' என, அமைச்சர் உதயகுமார் கூறினார்.

சென்னை, திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில், புதிதாக துவங்கப்பட்ட, 'கோவிட் ஸ்கிரீனிங்' மையத்தை, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி:உயிர் பயத்தில், வீட்டில் முடங்கி கிடக்கும் தலைவர், அறிக்கை வாயிலாக குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். களத்திற்கு வந்து, பல நாட்களாகி விட்டன. களத்தில் நிற்பவர்களை பார்த்து, அறிக்கையில் சேற்றை வாரி இறைக்கிறார்; அதை மக்கள் விரும்பவில்லை.நோய் தொற்று காலத்தில், களத்தில் காணாமல் போன தலைவர், வீட்டில் இருந்து கபடி ஆடிக் கொண்டிருக்கிறார்.

ஜெ., காலத்தில் இருந்தது போல், காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஊரடங்கில், 95 நாட்களில், காவல் துறையினர் கண்ணியமிக்க வகையில் பணியாற்றினர். சாத்தான் குளத்தில் விலை மதிப்பில்லாத, இரு உயிர்களை இழந்து உள்ளோம். இந்த விவகாரத்தில், சட்டம் தன் கடமையை செய்யும்.நீதிமன்ற அறிவுறுத்தல்கள்படி, சி.பி.ஐ., மற்றும் சி.பி.சி.ஐ.டி., விசாரணைகளுக்கு, எந்த குறுக்கீடும் இன்றி, முதல்வர் உடனடியாக அரசாணை வெளியிட்டு, உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.நீதியை நிலைநாட்டுவதில், முதல்வர் உறுதியாக உள்ளார். அவரை ராஜினாமா செய்யுமாறு, ஸ்டாலின் சொல்வது நியாயமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜூலை-202018:12:06 IST Report Abuse
Endrum Indian சுடலை மாயாண்டி என்று சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்வது ஏனோ???
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
04-ஜூலை-202012:38:26 IST Report Abuse
Tamilnesan அப்படி கபடி ஆடுபவர்களை வீட்டில் முடங்கி இருக்க செய்ய வேண்டியது தானே ?
Rate this:
Cancel
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
03-ஜூலை-202016:47:35 IST Report Abuse
l vijayaraghavan கையில் மக்கள் தானே எம்பி எம் எல் ஏ என்று பதவியை தூக்கிக் கொடுத்தது? இங்கு 2000 வாங்கிக்கொண்டு, கேரளத்தில் எப்படியோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X