பொது செய்தி

இந்தியா

நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் சீன நிறுவனங்களுக்கு தடை

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
நெடுஞ்சாலை திட்டப் பணிகள், சீன நிறுவனங்கள், தடை

புதுடில்லி: லடாக் எல்லையில் நடந்த மோதலுக்குப் பின், சீன நிறுவனங்கள், பொருட்களை புறக்கணிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளன. ''நெடுஞ்சாலைத் துறை திட்டப் பணிகளில் பங்கேற்க, சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில், சீனாவின் முதலீடு அனுமதிக்கப்பட மாட்டாது,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, நேற்று தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி இரவு, சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில், இந்திய வீரர்கள், 20 பேர் உயிர் தியாகம் செய்தனர்.

சீனாவின் இந்த அத்துமீறலால், நாட்டு மக்களிடம் சீனாவுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது. சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை, வலுத்து வருகிறது. மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் சிலர், 'சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்' என, வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.


கோரிக்கை



இதன் எதிரொலியாக, சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தை, ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் ரத்து செய்தது. மஹாராஷ்டிர அரசு, சீன நிறுவனங்களுடன், 5,000 கோடி ரூபாய் மதிப்பில் செய்திருந்த, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது.
டில்லியில் உள்ள நடுத்தர ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கத்தினர், 'டில்லியில், ஓட்டல்களில் தங்க, சீனர்களை அனுமதிக்க மாட்டோம்' என, அறிவித்துள்ளனர்.

'சீனாவிலிருந்து, 500க்கும் மேற்பட்ட பொருட்கள், இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன; அவற்றை தடை செய்ய வேண்டும்' என, இந்திய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பீஹார் தலைநகர் பாட்னாவில், 2,900 கோடி ரூபாயில், பாலம் கட்டும் பணி, சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை, பீஹாரை ஆளும், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி அரசு, ரத்து செய்துள்ளது.

தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, சீனாவின், 'டிக் டாக், ஹெலோ ஷேர்இட்' உட்பட, 59 'ஆப்'களுக்கு, மத்திய அரசு நேற்று முன்தினம் தடை விதித்தது. இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, டில்லியில் நேற்று கூறியதாவது:இந்தியாவில், சாலை கட்டுமானப் பணிகளில், கூட்டுத் திட்டங்களில் பங்கேற்க, சீன நிறுவனங்களை அனுமதிப்பதில்லை என, மத்திய அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது.நெடுஞ்சாலை திட்டங்களில், சீன நிறுவனங்களை தடை செய்யவும், இந்திய நிறுவனங்களுக்காக, விதிகளை தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சில திட்டங்களில் சீன நிறுவனங்கள் இருந்தாலும், இனி வரும் காலங்களில், சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்திய நிறுவனங்களின் பங்கேற்பை அதிகப்படுத்தும் நோக்கில், பெரிய திட்டங்களில் அவற்றின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை செயலர், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் தலைவர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். தகுதியான இந்திய நிறுவனங்கள், ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, விதிமுறைகளை எளிதாக்க உத்தரவிட்டு உள்ளேன்.


முன்னுரிமை



தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில், கூட்டு திட்டமாக இருந்தாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம். சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது குறைக்கப்படும், இந்தியாவிலேயே உற்பத்தி செய்து, தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர, முன்னுரிமை அளிக்கப்படும்.இந்திய வர்த்தகம் வலிமையானது; வளர்ச்சி அடையும் திறனுள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி, நம் பயணம் தொடரும். பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவை, இந்திய வர்த்தகத்துக்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.


'4ஜி' டெண்டர் ரத்து



பி.எஸ்.என்.எல்., நிறுவனம், '4ஜி' சேவைகளை வழங்க தீவிரமாக உள்ளது. இதற்காக, பல்வேறு சீன தொலை தொடர்பு நிறுவனங்களிடம், 'டெண்டர்'கள் கோரப்பட்டு இருந்தன. இந்நிலையில், 'சீன உபகரணங்கள் எதையும், 4ஜி சேவைப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது; உள்நாட்டு தொழில்நுட்பத்தையே பயன்படுத்த வேண்டும்' என, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, தொலை தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய டெண்டர்கள் கோரப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தக கொள்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு



சீனாவுடனான வர்த்தக கொள்கைகளை தெரிவிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்ரியா பண்டிட், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:லடாக் மோதலுக்குப் பின், சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம், இந்திய மக்களிடம் அதிகரித்துள்ளது. தேசத்தின் பாதுகாப்பு கருதி, 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஆனாலும், சில மாநில அரசுகள், சில நிறுவனங்கள், சீன நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இவை, மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தும். அதனால், சீனா
வுடனான வர்த்தக கொள்கைளை தெரிவிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். சீன நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், பிரதமரின் தற்சார்பு கொள்கைக்கு எதிரானது. அதனால், இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202021:56:45 IST Report Abuse
ஆப்பு ஜிங் ஜிங் மஹாபலிபுரம் வந்துட்டு எங்கே போனார் தெரியுமுல்ல? நேரா மும்பைதான். அங்கே ஃபட்னாவிஸ் அரசுடன் ரோடு போட ஒப்பந்தம். பெரியவரும் போயிருந்தாரு. இப்போ தாக்கரே அதுக்கு ஆப்பு வெச்சுட்டாரு.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
02-ஜூலை-202017:49:17 IST Report Abuse
blocked user மனித வளம் இருக்கிறது. மூளை இருக்கிறது. சீனனைப்போல செயல்பட முடியாதா என்ன?
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
02-ஜூலை-202012:38:18 IST Report Abuse
Chandramoulli நல்ல முடிவு. முறையாக செயல்படுத்தவும். இந்தியாவில் அந்த பொருள்கள் தயாரிக்கும் அளவுக்கு தொழிலை விரைவில் செயல்படுத்த தனியார் முதலீடு மூலம் வங்கிகள் கடன் உதவி செய்ய உதவ வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X