பொது செய்தி

இந்தியா

எல்லையில் தொடர்ந்து பதற்றம்:லடாக் விரைந்தன ரோந்து படகுகள்

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
எல்லை, தொடர்ந்து பதற்றம்:லடாக் விரைந்தன ரோந்து படகுகள்

புதுடில்லி : எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அதிக சக்தி கொண்ட, வேகமாக சென்று தாக்கக் கூடிய ரோந்துப் படகுகளை, நம் கடற்படை, லடாக்குக்கு அனுப்பி வைத்து உள்ளது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒரு பக்கம், ராணுவ உயரதிகாரிகள் நிலையில் பேச்சு நடந்து வருகிறது. அதே நேரத்தில், சீனா தன் ராணுவத்தை குவித்து வருவதால், நம் படைகளும் எல்லைக்கு விரைந்துள்ளன.
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில், முப்படைகளும் தயார் நிலையில் இருந்து வருகின்றன.

ராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள், போர் விமானங்கள் என, வரிசையாக எல்லைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இந்நிலையில், லடாக்கில், தற்போது பிரச்னை உள்ள, பாங்காங் ஏரி பகுதி யில் ரோந்து பணிகளை மேற்கொள்வதற்காக, 12க்கும் மேற்பட்ட, அதிக சக்தி கொண்ட ரோந்துப் படகுகளை, கடற்படை அனுப்பியுள்ளது. ராணுவத்தின், 'சி - 17' சரக்கு விமானம் மூலம் இவை அனுப்பப்பட்டுள்ளன.




ராஜ்நாத் பயணம்



எல்லையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், நாளை லடாக் செல்கிறார். எல்லையிலுள்ள நிலவரம் குறித்தும், படைகளின் தயார் நிலை குறித்தும், ராணுவ உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


படிப்படியாக விலக்கல்



எல்லைப் பிரச்னை தொடர்பாக, இரு ராணுவத்தின் உயரதிகாரிகள் நிலையிலான கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, 12 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த கூட்டத்தில், 'மிக துரிதமாக, அதே நேரத்தில் படிப்படியாக படைகளை விலக்கிக் கொள்வது' என, முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆஸி பிரதமர் வருத்தம்



ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ''இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து உள்ளது. இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ''தெற்கு சீன கடல், கிழக்கு சீன கடல் பகுதியிலும் எல்லைப் பிரச்னை ஏற்பட்டுள்ளது வருத்தம்அளிக்கிறது. இந்த நிலையில் நம் படைகளை வலுப்படுத்த, 1,400 கோடி ரூபாய் செலவிடப்படும்,''என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
02-ஜூலை-202017:26:19 IST Report Abuse
blocked user மேற்குப்பக்கத்தில் பாக்கிகளை ஒழித்துக்கட்ட தயாராக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Ravi - Chennai,இந்தியா
02-ஜூலை-202015:54:52 IST Report Abuse
Ravi 25 வருடங்களுக்கு முன்பு சீனா தயாரிப்பு என்று ஒரு பீங்கான் கிண்ணத்தை காட்டுவார்கள் , இந்திய சிறுதொழில்களை அழித்து சீனாவிற்கு உதவ சிதம்பரம் , இத்தாலிய குடும்பம், அதனுடைய புத்திசாலி பிள்ளை என்று ஒரு குரூப் வேலை செய்து இருக்கிறது , டோக்லாம் பிரச்னை வந்த போது சீனா மந்திரிகளை பார்த்து கூடி குலாவி விருந்து உண்டதின் ரகசியம் இப்போது அல்லவா தெரிகிறது , மறு பக்கம் நம் நாட்டு குழந்தைகள் சீனா எல்லையில் நாட்டை காக்கிறார்கள் , நமக்காக சாகிறார்கள் .
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
02-ஜூலை-202014:42:01 IST Report Abuse
Rasheel சீனாவை சீனாக்காரனை அரசியலில் தொழிலில் நம்ப கூடாது. இந்தியா ஏற்கனவே பாடம் கற்றுள்ளது. இதை மறந்து அவனுடன் உறவு வைப்பது தற்கொலைக்கு சமமானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X