2030க்கான இலக்குகளை அடைவதை கொரோனா பாதித்துள்ளது

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
2030க்கான இலக்குகள்,கொரோனா பாதித்துள்ளது

நியூயார்க்: 'உலக அளவில் அனைத்து நாடுகளும், 2030ம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதை, கொரோனா பரவல் வெகுவாக பாதித்துள்ளது' என, ஐ.நா., சபைக்கான, இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, டி.எஸ்.திருமூர்த்தி கூறியுள்ளார்.

ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் வறுமை ஒழிப்பு குறித்த, உயர்மட்ட அளவிலான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, டி.எஸ்.திருமூர்த்தி கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவல், உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பல நாடுகளில் கடுமையான மந்த நிலைக்கு வழிவகுத்து உள்ளது.
அனைத்து நாடுகளின், 2030ம் ஆண்டிற்கான, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டிய நடவடிக்கைகளில், அச்சுறுத்தலை ஏற்படுத்திஉள்ளது.


76.7 கோடி

எதிர்காலத்தில், இதுபோல் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், நாடுகளின் திறனை மேம்படுத்துவதற்கான அவசர தேவையை, இந்த தொற்றுநோய் எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில், மக்களின் வருமானத்தை உயர்த்துவது, பெண்கள், குழந்தைகள் மீது கவனம் செலுத்துவது, அனைத்து சமூக மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில், கவனம் செலுத்தி வருகிறோம்.உலகம் ஒரு குடும்பம் என்பதை உறுதி செய்யும் வகையில், எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து, நாட்டில், உறுதியான வளர்ச்சிக்கான கூட்டாட்சி தத்துவத்தை, மேலும் வலுப்படுத்தி வருகிறோம்.

மக்களுக்கு வருமானம் அளிக்கும், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, மற்றும் துாய்மையான எரிபொருள் போன்ற அடிப்படை சேவைகளை மேம்படுத்துவதன் மூலம், நாங்கள் எட்ட நினைக்கும் இலக்கை, விரைவாக அடைந்து வருகிறோம்.
இதற்கு, 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் அடிப்படையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.



மிக வறுமையில் 76.7 கோடி மக்கள்



ஐ.நா., சபையின், 74வது அமர்வின் தலைவர், டிஜ்ஜனி முகமமது -பாண்டே, உலக அளவில் வறுமை ஒழிப்புக்கான கூட்டணியை, நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது:வறுமை ஒழிப்புக்கான நாடுகளின் கூட்டணி, நிரந்தரமானது. இந்தக் கூட்டணி தகவல் பரிமாற்றங்கள், கருத்து பகிர்வுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இதில், அடிப்படை உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது.உலகில், கொரோனா பாதிப்பிற்கு முன், 201 கோடி மக்கள், ஏழைகளாக வகைப்படுத்தப்பட்டனர். இவர்களில், 76.7 கோடி மக்கள் மிக வறுமையில் உள்ளனர்.

வைரஸ் பரவல் மற்றும் காலநிலை மாற்றம் காரண மாக, 2030ல், மேலும், 100 கோடி மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவர்.உலகில் வறுமை ஒழிப்புத் திட்டம், வளர்ச்சிக்கான இலக்குகளில், முதலாவது இடத்தில் உள்ளது. ஆனால், இதை நிறைவேற்றுவதில், பல்வேறு சிக்கல்கள் மற்றும் சவால்கள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார். ஐ.நா., பொதுச்செயலர், அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:பல வருடங்களாக, முன்னேற்றத்தை கண்ட நாடுகள் பலவற்றிலும், தற்போது வறுமை மற்றும் பசி அதிகரித்து வருகிறது.இதனால், நாடுகளுக்கு உள்ளேயும், அவற்றுக்கு இடையிலும் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன.


மாற்றம்



வறுமையில் வாழும் மக்கள், உழைப்பாளிகள், பெண்கள், குழந்தைகள், உடல் குறைபாடு உள்ளவர்கள், கொரோனா பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்கும் நடடிக்கைகளில், தீவிரம் காட்ட வேண்டும். அவர்களுக்கு, வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதன் மூலம், பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
02-ஜூலை-202014:23:39 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் அன்னே 2020 தாண்டி இருப்போமா பாருங்கள் 2021 இல் இதை பற்றி பேசலாம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஜூலை-202010:14:19 IST Report Abuse
Lion Drsekar எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ளலாம், வறுமை ஒழிப்பு என்பதை வைத்துக்கொண்டுதான் இன்றய அரசியலே நடக்கிறது, நாளுக்கு நாள் அந்த தொகை ஏறிக்கொண்டே போகிறதே தவிர குறைந்த பாடில்லை, அப்படி இருக்க வளர்ந்தது யார் என்று கணக்கில் கொண்டு அங்கு மற்றம் கொண்டுவர வேண்டும், மேலும் இந்த கொரோனா ஒரு வியாதியே அல்ல, இன்று நாம் பின்பற்றி வரும் அதுவும் சட்டமாக போட்டு அமல்படுத்தவில்லையென்றால் தண்டனை கொடுக்கும் அளவுக்கு செயல்படும் அந்த செயலை ஒரு சாரார் செய்து வந்தனர் அதற்க்கு இன்றும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்து, அவர்கள் இனத்தை ஒழிக்க முழுமூச்சாக செயல்பட்டுக்கொண்டுவருகிறார்கள், அதுதான் சமூக இடைவெளி, இதை ஒவ்வொன்றாக பிரித்து கூறினால், அன்று அவர்கள் செய்தது அனைத்துமே விஞ்ஞானம் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது, இந்த தவறை யாரும் உணரக்கூடாது என்று இன்றும் வெறியை தூண்டி விட்டுக்கொண்டு இருப்பது வருத்தம், உண்மையை அனைவரும் ஏற்றுக்கொண்டு ஸ்ரீ ராமானுஜர் காலம் போல் அனைவரும் இந்த இனத்துக்கு வருவார்கள், இதுதான் உண்மை, ஆகவே இனியாவது யாரையும் புண்படுத்தாமல், எந்த மதத்தையும், ஜாதியையும் கேவலமாக பேசாமல், மக்களுக்கு சேவை செய்வதையே சேவையாகக் கொண்டால் எந்த வியாதியும் எதுவும் செய்ய முடியாது, அந்த கூடுற வியாதிகளை மக்கள் வெல்வார்கள், நாடு வளரும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X