சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தந்தை கொலையில் பா.ஜ., நிர்வாகி கைது

Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தஞ்சாவூர்; ஆர்.எஸ்.எஸ்., முன்னாள் நிர்வாகியின் தந்தை கொலை வழக்கில், பா.ஜ., நகர தலைவரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ஆசிரியர் கோபாலன், 68. இவர், அங்குள்ள உத்தராதி மடத்தின் பொறுப்பாளராக இருந்தார்.இவரது மகன் வாசுதேவன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், மண்டல பொறுப்பாளராக இருந்தவர். கோபாலன் நேற்று முன்தினம் இரவு,
 ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தந்தை  கொலையில் பா.ஜ., நிர்வாகி கைது

தஞ்சாவூர்; ஆர்.எஸ்.எஸ்., முன்னாள் நிர்வாகியின் தந்தை கொலை வழக்கில், பா.ஜ., நகர தலைவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ஆசிரியர் கோபாலன், 68. இவர், அங்குள்ள உத்தராதி மடத்தின் பொறுப்பாளராக இருந்தார்.இவரது மகன் வாசுதேவன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், மண்டல பொறுப்பாளராக இருந்தவர். கோபாலன் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் நின்றபோது, மர்ம நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார். நாச்சியார் கோவில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மடத்துக்கு சொந்தமான கடையை காலி செய்த பிரச்னையில், நகர, பா.ஜ., தலைவர் சரவணன், ௪௮, கோபாலனை கொலை செய்தது தெரிந்தது. சரவணனை நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'மடத்துக்கு சொந்தமான கடையில், சரவணன் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். வாடகை சரியாக கொடுக்கவில்லை.'நீதிமன்றம் மூலம் கடையை காலி செய்ய, மடத்தின் பொறுப்பாளர் கோபாலன் நடவடிக்கை எடுத்தார். அந்த கோபத்தில், கோபாலனை, சரவணன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkata achacharri - india,இந்தியா
03-ஜூலை-202010:52:45 IST Report Abuse
venkata achacharri திராவிட விஷமிகள் மட்டும் தான் கெட்டவர்கள் பி ஜி பி தேசபக்தர்களா செய்தார்கள் என்ன தேசபக்தி
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
02-ஜூலை-202022:26:52 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவரை பாஜக கட்சி நிர்வாகியே கொலை செய்துள்ளார். அதற்குள் சில பாஜக அடிப்பொடிகள் வேற்று மத தீவிரவாதிகள் அண்ணாரைக் கொலை செய்ததாக கதைகளை அவிழ்த்துவிட்டு விசாரணையை திசை திருப்ப முயன்றனர். இது மிகவும் தவறு. கட்டுக்கதைகளை பரப்புகிறவரும் ஒருவகையில் மத பிரிவினையை தூண்டியவராவார். ஐவரும் கண்டிக்கவும் தண்டிக்கவும் உரியவரே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X