பெண் போலீஸ் தற்கொலை சக போலீசாரிடம் விசாரணை

Added : ஜூலை 01, 2020
Advertisement
திருச்சி; கடன் வாங்கிய போலீசார் ஏமாற்றியதால், பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடக்கிறது.திருச்சி, மணப்பாறை அடுத்த வையம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் பவானி, 35. கணவரை பிரிந்து, 9 வயது மகளுடன், மூத்த சகோதரி வீட்டில் வசித்து வந்தார்.கடந்த, 28ம் தேதி, பவானி எலி பேஸ்டை குளிர்பானத்தில் கலந்து குடித்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
 பெண் போலீஸ் தற்கொலை சக போலீசாரிடம் விசாரணை

திருச்சி; கடன் வாங்கிய போலீசார் ஏமாற்றியதால், பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடக்கிறது.

திருச்சி, மணப்பாறை அடுத்த வையம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் பவானி, 35. கணவரை பிரிந்து, 9 வயது மகளுடன், மூத்த சகோதரி வீட்டில் வசித்து வந்தார்.கடந்த, 28ம் தேதி, பவானி எலி பேஸ்டை குளிர்பானத்தில் கலந்து குடித்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இறந்தார்.

தற்கொலைக்கு முன், அவர் மொபைலில் பேசி, நண்பர்களுக்கு அனுப்பிய வீடியோவில் கூறியிருப்பதாவது:இடம் வாங்க ஆசைப்பட்டேன். பணம் வாங்கியவர்கள் திருப்பித் தரவில்லை. போலீஸ் பட்டாலியன் பிரிவில் பணியாற்றும், உமா மற்றும் அருள் முருகன் ஆகியோருக்கு, தலா, 4 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன்.

கடந்த, 2013ம் ஆண்டு முதல் பணத்தை கேட்டும், அவர்கள் தரவில்லை. என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள் என்று திமிராக பேசுகின்றனர். சில நாட்களாக காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளது. எல்லாரும் ஏமாத்துறாங்க; என்ன பண்றதுன்னு தெரியல.இவ்வாறு, குறிப்பிட்டு உள்ளார்.கடன் வாங்கியவர்கள் ஏமாற்றியதாலும், கொரோனா பாதிப்பு இருக்கலாம், என்ற அச்சத்திலும் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. உமா, அருள் முருகன் ஆகியோரிடமும் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X