சீனா மீதான கோபம் பல மடங்கு அதிகரிக்கிறது: டொனால்டு டிரம்ப்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 சீனா மீதான கோபம் பல மடங்கு அதிகரிக்கிறது: டொனால்டு டிரம்ப்


வாஷிங்டன் :கொரோனா பரவலுக்கு காரணமான சீனா மீதான கோபம் பலமடங்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
'அமெரிக்காவின் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தவறான பாதையில் செல்வதால் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை' என அந்நாட்டின் தொற்றுநோய்த்துறை நிபுணர் அந்தோணி பவுசி நேற்று முன்தினம் கூறினார். இதனால் பாதிப்பின் எண்ணிக்கை பலமடங்கு உயரும் எனவும் அவர் எச்சரித்தார்.


latest tamil news
இதையடுத்து அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில் 'அமெரிக்காவில் கடும் பாதிப்பினை ஏற்படுத்திய வைரஸ் உலகம் முழுதும் தன் கோர முகத்தை காட்டியுள்ளது. இதனால் சீனா மீதான கோபம்
பல மடங்கு அதிகரித்து
உள்ளது' என கூறியுள்ளார்.
இந்நிலையில் 'நோயை முறையாக கையாளாத டிரம்பின் நிர்வாகம் மக்களை திசை திருப்ப தொற்றுநோயை அரசியலாக்குகிறது' என சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே கொரோனா வைரசுக்கு எதிராக இரண்டு மருந்துகள் பலன் தருவது உறுதியாகி உள்ளது. அதில் 'ரெம்டெசிவிர்' என்ற மருந்து முழுவதையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமெரிக்கா வாங்கியுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வேறு எந்த நாடுகளுக்கும் இந்த மருந்து கிடைக்காத வகையில் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக சுகாதார வல்லுனர்கள் கூறி
உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
03-ஜூலை-202013:31:16 IST Report Abuse
ocean kadappa india உலக மக்கள் அனைவரையும் அழித்து விட்டால் நம் இஷ்டம் போல் உலகை ஆளலாம் என்பது ஜின் பிங் எண்ணம். அது சரியாக நடக்கவில்லை. குரோனா தொற்று அரை குறையாக உள்ளது. அதனால் பைத்தியமாக்கும் பன்றி வைரஸை விட்டால் ஒருவர் விடாமல் எல்லாரையும் தங்கு தடையின்றி பைத்தியமாக்கி விடும் அப்போது நம் எண்ணம் ஈடேறும் என்று ஜின் பிங் நம்பி இருக்கிறார்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
03-ஜூலை-202013:24:09 IST Report Abuse
ocean kadappa india சீனாவை தவிர்த்து எச் ஒன் என் ஒன் பன்றி வைரஸ் உலக மக்களை பைத்தியமாக்கி விடும். எல்லாரும் பைத்தியமாவதால் மருந்து கேட்டு சீனாவிடம் கெஞ்சவேண்டி இருக்கும். சீனா எல்லைகளை விரிவு படுத்த பைத்தியங்கள் சண்டைக்கு வராது..
Rate this:
Cancel
rajan - chennai,இந்தியா
02-ஜூலை-202019:42:46 IST Report Abuse
rajan Unmai kasakkum. During 1962, China cheated us. Nehru was not prepared and lost a good portion of Indian soil. We can not trust China. But, local support for China from congress, just to grab power from BJP is dangerous. No national interest. In other countries, normally all are united
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X