கோவை: கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர், முக கவசம், ஸ்டெதஸ்கோப், மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை கிருமி நீக்கம் செய்யும் கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சமூக மருத்துவத்துறை டாக்டராக இருப்பவர் பன்னீர் செல்வம். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சமயத்தில், மருத்துவர்களுக்கு பயன்படும் வகையில், புற ஊதா கதிர்களை பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யும் கருவி ஒன்றை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில், பெரிய அளவிலான தெர்மாகோல், அலுமினிய பாயில் பேப்பர் பயன்படுத்தி அதில் புறஊதா கதிர்களை கொண்டு பெட்டி ஒன்றை வடிவமைத்தார். இந்த கருவியில் பயன்படுத்திய என்.95 மாஸ்க், ஸ்டெதஸ்கோப், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை, கிருமிநீக்கம் செய்ய முடியும். தான் தயாரித்த இந்த கருவியை முதலில் கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பயன்படுத்துவதற்காக இன்று வழங்கினார்.
இதுகுறித்து பன்னீர்செல்வம் கூறுகையில், ''என்.95 முக கவசங்கள் சற்று விலையுர்ந்தவை. நான் தயாரித்துள்ள இந்த புற ஊதாக்கதிர் பெட்டியில், அந்த முக கவசங்களில் ஒட்டியிருக்கும் கிருமிகளை நீக்க முடியும். அதுமட்டுமின்றி, மொபைல், வாட்ச் உள்ளிட்ட பொருட்களையும் பெட்டியில் வைத்து கிருமி நீக்கம் செய்யலாம். இதற்கு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். இதன்முலம், ஒரு என்.95 முக கவசத்தை 5 முறை வரையிலும் பயன்படுத்தலாம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE