பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020
Share
Advertisement

சென்னை : தென் மேற்கு பருவகாற்று தீவிரமடைந்து வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news




இது குறித்து அம்மையம் வெளியிட்ட அறிக்கை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென் மேற்கு பருவ காற்று தீவிரமடைந்து வருவதாலும், வெப்பச்சலனத்தின் காரணமாகவும் வட கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளிலும், மேற்கில் கோவை, தர்மபுரி, சேலம் மற்றும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.


latest tamil news




அதிகபட்சமாக 35 டிகிரி வரை வெயில் பதிவாகும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு, வரும், 5ம் தேதி வரை செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X