பொது செய்தி

தமிழ்நாடு

கிருமி நீக்கம் செய்ய நவீன கருவி ; கோவை மாணவர் அசத்தல்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement


கோவை : கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர், முகக்கவசம், ஸ்டெதஸ்கோப், மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை கிருமி நீக்கம் செய்யும் கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.



latest tamil news




கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சமூக மருத்துவத்துறை மாணவராக இருப்பவர் பன்னீர் செல்வம். இவர், பெரிய அளவிலான தெர்மாகோல், அலுமினிய பாயில் பேப்பர் பயன்படுத்தி, அதில் புறஊதா கதிர்களை கொண்டு பெட்டி ஒன்றை வடிவமைத்தார். பயன்படுத்திய என்.95 மாஸ்க், ஸ்டெதஸ்கோப், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை, கிருமிநீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை முதலில் கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பயன்படுத்துவதற்காக நேற்று வழங்கினார்.


latest tamil news




பன்னீர்செல்வம் கூறுகையில், ''என் 95., முக கவசங்கள் சற்று விலையுர்ந்தவை. நான் தயாரித்துள்ள இந்த புற ஊதாக்கதிர் பெட்டியில், அந்த முகக்கவசங்களில் ஒட்டியிருக்கும் கிருமிகளை நீக்க முடியும். அதுமட்டுமின்றி, மொபைல், வாட்ச் உள்ளிட்ட பொருட்களையும் பெட்டியில் வைத்து கிருமி நீக்கம் செய்யலாம். இதற்கு வெறும், ஐந்து நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். இதன்முலம், ஒரு என்.95 முக கவசத்தை, ஐந்து முறை வரையிலும் பயன்படுத்தலாம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KANTHI - Chennai,இந்தியா
02-ஜூலை-202013:11:35 IST Report Abuse
KANTHI கிரேட் கண்டுபிடிப்பு . வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
02-ஜூலை-202010:53:03 IST Report Abuse
Dr.C.S.Rangarajan என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்........
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஜூலை-202010:20:57 IST Report Abuse
Lion Drsekar நம் இளைஞர்களிடம் இல்லாத திறமையா இப்படி கண்டுபித்தவர்களுக்கு அரசு உடனடியாக தானே முன்வந்து எல்லா உதவிகளையும் செய்து, பங்க்கில் லோன் கொடுக்க வசதி செய்து அவர்களை ஒரு தொழில் அதிபர்களாக ஆக்குவதுதான் கடமை, அப்படி நடந்தால் நம் நாட்டின் வளம் பெருகும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X