சீன 'ஆப்'கள் தடை விதிப்பிற்கு அமெரிக்கா ஆதரவு

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: நாட்டின் பாதுகாப்பு கருதி, 'டிக்டாக், ஷேர்இட், ஹலோ' உள்ளிட்ட, சீன நிறுவனங்களின், 59 மொபைல் போன், 'அப்ளிகேஷன்ஸ்' என்ற செயலிகளுக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்காவில் ஆதரவு அதிகரித்துள்ளது.



latest tamil news



லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, 'சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்; சீனப் பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது' என, ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், டிக்டாக், ஷேர்இட், ஹலோ உள்ளிட்ட, 59 மொபைல் போன் செயலிகளை, மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது.இந்த செயலிகள், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு, ராணுவம் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படுவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



அதேபோல், சீன செயலிகளுக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்காவில் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்திய நடவடிக்கையை தொடர்ந்து, அமெரிக்காவிலும், டிக் டாக் உட்பட பல சீன செயலிகளுக்கு, தடை விதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
02-ஜூலை-202016:01:35 IST Report Abuse
Rameeparithi சீன ஆப் தடை மட்டும் போதாது ... சீன உற்பத்திகளையும் வாங்காமல் இருக்க மக்கள் உடனே முன் வரவேண்டும் அப்போதான் சீனாவின் கோட்டம் அடங்க ஆரம்பிக்கும்
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
02-ஜூலை-202015:06:18 IST Report Abuse
Karthik சீனா அலைபேசி செயலிகளைத் தடைச் செய்ததுப் போல், சீனா அலைபேசிகளையும் தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
02-ஜூலை-202012:34:17 IST Report Abuse
OUTSPOKEN சீனாவிற்கு எதிராகவும், இந்தியாவிற்கு ஆதரவாகவும் அமெரிக்கா இருப்பதை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம் அமெரிக்காவிற்கு அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி, போடும் வரைதான். சூழ்நிலைகள், காட்சிகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X