பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 ரிசல்ட் இப்போது வேண்டாமே! தேவையில்லாத பதற்றம் உருவாக வாய்ப்பு

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோவை : ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இச்சூழலில், பிளஸ் 2 ரிசல்ட் வெளியிட்டால், உயர்கல்வியில் சேருவது குறித்த தேவையில்லாத பதற்றம் ஏற்படும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



latest tamil news


தமிழகம் முழுக்க, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ம் தேதி துவங்கி 24ம் தேதியுடன் நிறைவடைந்தது. இவர்களுக்கான ரிசல்ட்டை, விரைவில் வெளியிடுவது குறித்த ஆலோசனைகள் நடக்கின்றன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இச்சமயத்தில், ரிசல்ட் வெளியிடுவதால், பல்வேறு குழப்பங்கள் ஏற்படலாம் என்பது, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், ரிசல்ட் வெளியிடுவது, உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புக்கு, முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துவிடும் என்கின்றனர் பெற்றோர்.வெளி மாவட்ட கல்லுாரிகளை பார்வையிடுவது மற்றும் அட்மிஷன் நடைமுறைகள் மேற்கொள்ள முனைப்பு காட்டி, பலரும் இ-பாஸ் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. தொற்று உள்ள பகுதிகளில் இருந்து, பெற்றோர் வெளியே வர முடியாத நிலை நீடிக்கிறது.

குழந்தைகளுக்கு, விரும்பிய கல்லுாரியில் சேர முடியாத நிலை ஏற்படுமோ என்ற பதற்றம் உருவாகலாம். எனவே, இயல்பு நிலை திரும்பிய பிறகு, ரிசல்ட் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


latest tamil news



தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறுகையில், ''பள்ளி, கல்லுாரிகளில் புதிய அட்மிஷன் துவங்க கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. எனவே இப்போது ரிசல்ட் வெளியிட்டாலும், எந்த பிரயோஜனமும் இல்லை. பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. இதோடு, இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி, மதிப்பெண்கள் கணக்கிட்ட பிறகு, ரிசல்ட் வெளியிடலாம். முதல்வரிடம் கலந்தாலோசித்த பிறகு ரிசல்ட் வெளியிடுவது குறித்து, அறிவிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசின் முடிவு, மக்களை அலைக்கழிப்பதாக அமைந்துவிடக்கூடாது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202015:11:50 IST Report Abuse
kulandhai Kannan இந்த கல்வியாளர்கள் யார்?? யாருடைய கைக்கூலிகள்?? இந்த சுயநலவாதிகள்தான் இன்று கோர்ட்டுகளுக்கும், தமிழக அரசுக்கும் அஜெண்டா நிர்ணயிக்கிறார்களா??
Rate this:
Cancel
bhuvana - newdelhi,இந்தியா
02-ஜூலை-202015:08:39 IST Report Abuse
bhuvana ரிசல்ட் வந்தாலும் வர தாமதம் ஆனாலும், காசு சம்பாதிப்பவர்கள் ச்ம்பாதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அப்படி செய்யும் கல்லூரியில் ஏன் கொண்டுப் போய் சேர்க்கிறீர்கள்? அதை தவிர்க்க வேண்டியது தானே? அந்த கல்லூரிகளின் தரம், மதிப்பு, இருப்பதால் தானே. தங்களால் பணம் கொடுக்க முடியும் என்பவர்கள் சேர்கிறார்கள். ஸ்டார் ஹோட்டலில் இட்லி ரூ.30/=. உயர்தர ஹோட்டலி ரூ.20/. கையெந்தி பவனில் ரூ.6/. நமது தேவைக்கு வசதி, மனத்திற்கு ஏற்ப தேர்வு செய்கிறோம். பெரிய ஹோட்டல்கள், கல்லூரிகள் வாங்கும் பணத்திற்கு பராமரிப்பு செலவுகள் அதிகம். நல்ல விரிவுரையாளர்கள் போன்ற செலவுகள்) தேர்ந்து எடுப்பது நாம் தான். சரியான நேரத்தில் முடிவுகள் வந்தால் தான், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காது. தாமத்தினால் எதிர்காலம் பாதிக்கும். ஊரடங்கு உள்ள மாவட்டம் தவிர, மீதி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் சேரலாமே? மேலும் தகுதி இழந்த தேர்வினை எழுதி, பாஸ் செய்ய செளகரியமாக இருக்கும். ஒரு சில சிறிய குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய பார்க்கவேண்டுமே தவிர, தேர்வு முடிவினை தள்ளி போடுவதால், எதிர்காலத்தில் மாணவர்கள் வாழ்க்கை முழுக்க நிறைய போரட வேண்டிவரும். (Junion மாணவர்களுடன் வேலை வாய்ப்பு மற்றும் பல).
Rate this:
Cancel
Suresh - villupuram,இந்தியா
02-ஜூலை-202012:14:36 IST Report Abuse
Suresh உண்மை. கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மேனேஜ்மென்ட் சீட்டை வேகமாக நிரப்பி வருகின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X