சிறுமி தொடர் பாலியல் பலாத்காரம்: மன்னிப்பு கோரியுள்ள காவல் துறை

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement

புவனேஸ்வர்; ஒடிசாவில் உள்ள காவல் நிலையத்தில், சிறுமியை, தொடர் பாலியல் பலாத்காரம் செய்த, இன்ஸ்பெக்டர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளார். சிறுமியிடம், மாநில காவல் துறை மன்னிப்பு கோரியுள்ளது.



latest tamil news



ஒடிசாவில் உள்ள சுந்தர்கர் மாவட்டம், பிர்மித்ராபூருக்கு, மார்ச், 25ல் நடைபெற்ற கண்காட்சிக்கு, 13 வயது சிறுமி வந்துள்ளார்.கொரோனா ஊரடங்கால், சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த சிறுமியை, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, பொறுப்பு இன்ஸ்பெக்டர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அடுத்த நாள், சிறுமி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அடிக்கடி காவல் நிலையத்திற்கு அழைத்து, இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று போலீசார், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதில் கர்ப்பமான சிறுமிக்கு, பிர்மித்ராபூர் ஆரம்ப சுகாதார மையத்தில், 15ம் தேதி கருக்கலைப்பும் நடந்துள்ளது.


latest tamil news



இந்த துயர சம்பவம் குறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் படி, பொறுப்பு இன்ஸ்பெக்டர், டாக்டர், சிறுமியின் வளர்ப்பு தந்தை மற்றும் மூன்று போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு, நேற்று முன்தினம், குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, நேற்று விசாரணை தொடங்கியது. இந்நிலையில், பொறுப்பு இன்ஸ்பெக்டரை, 'டிஸ்மிஸ்' செய்து, மாநில டி.ஜி.பி., அபய், நேற்று உத்தரவிட்டார்.அவர் வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' சமூக வலைதள பதிவில், 'இன்ஸ்பெக்டரின் நடவடிக்கை வெட்கக்கேடானது. அவரது செயலுக்கு, மாநில காவல் துறை சார்பில், சிறுமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என, பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
07-ஜூலை-202005:10:18 IST Report Abuse
Muraleedharan.M இதுதான்டா போலீஷ்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202007:30:49 IST Report Abuse
தல புராணம் மாநில டி.ஜி.பி., அபய், அவரது செயலுக்கு, மாநில காவல் துறை சார்பில், சிறுமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என, பதிவிட்டுள்ளார். -
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202007:18:34 IST Report Abuse
தல புராணம் சிறுமியை, தொடர் பாலியல் பலாத்காரம் செய்த, இன்ஸ்பெக்டர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளார் - ஏன் கற்பழிப்பு, போக்ஸா சட்டப்பிரிவுகளில் குற்றப்பத்திரிக்கை போடப்பட்டு கைது ஏன் செய்யப்படுவதில்லை? அந்த நாய்களுக்கு சிறுமியை கற்பழிக்க எந்த சட்டத்தில் இடமிருக்கிறது? என்ன கேடுகெட்ட சட்டமைப்பு இது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X