பொது செய்தி

இந்தியா

தமிழகத்திலும் 'ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்'; மாநில அரசுக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரை?

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா தொற்றை, 20 நிமிடங்களில் கண்டறிய, டில்லியில் செய்யப்படும், 'ரேபிட் ஆன்டிஜன்' பரிசோதனைகளை, தமிழகத்திலும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான, ஐ.சி.எம்.ஆர்., முன்வந்துள்ளது.



latest tamil news



தலைநகர் டில்லியில், கொரோனா தொற்று தீவிரமடைந்ததால், அறிகுறி இல்லாதவர்களுக்கு, தொற்று உள்ளதா, இல்லையா என சோதித்து கொள்ள, 'ரேபிட் ஆன்டிஜன்' பரிசோதனை அவசியம் என தீர்மானித்து, மளமளவென மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனையில், கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை, 20 நிமிடங்களில் கண்டறியலாம். இதனால், தினமும், 10 ஆயிரம் பேருக்கும் அதிகமாக, டில்லியில் இந்த வகையான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

டில்லியில் ஒரு வாரத்தில், ஒரு லட்சம் பேருக்கு மேல், ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தபரிசோதனையில், 75 சதவீத அளவுக்கு மட்டுமே முடிவுகள் இருக்கும். இருப்பினும், ஆயிரக்கணக்கில் தொற்று அதிகரிப்பதால், மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்க, இந்த சோதனை உதவுவதாக, டில்லி மாநில அரசு கருதுகிறது.

இதை அறிந்த, விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர், நேற்று டில்லியில், ஐ.சி.எம்.ஆர்., டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவாவை சந்தித்துப் பேசினார். அப்போது, தன் விருதுநகர் லோக்சபா தொகுதியில், தொற்று அதிகரித்து வருவதால், ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி வேண்டினார்.


latest tamil news


இந்த சந்திப்பு குறித்து, மாணிக்கம் தாகூர் கூறியதாவது: கொரோனா தொற்றை விட, அது குறித்த அச்சமே, மக்களை ஆட்டிப் படைக்கிறது. தங்களுக்கு தொற்று உண்டா, இல்லையா என தெரிந்து கொள்ள, ஒவ்வொருவரின் மனமும் துடிக்கிறது. விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில், நிலைமை கைமீறுமோ என்ற நிலை இருப்பதால், சோதனைகளை அதிகரிப்பதே ஒரே வழி.

அந்த வகையில், என் கோரிக்கையை ஏற்ற, பல்ராம் பார்கவா, 'தமிழகத்திலும், ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்தி, தலைமை செயலருக்கு கடிதம் எழுதுகிறேன்' என, தெரிவித்துள்ளார். இவ்வாறு, மாணிக்கம் தாகூர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
02-ஜூலை-202019:02:44 IST Report Abuse
Sivagiri என்னவோ ஸ்டாலின்தான் தனது அறிவை கசக்கி பிழிந்து எடுத்து இந்த யோசனையை தெரிவித்ததாகவும் அதை எடப்பாடி அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என்றும் அறிக்கை விட்டிருக்கிறார் . . . ஏற்கனவே icmr-முடிவெடுத்து விட்டதை தெரிந்து கொண்டு அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார்கள் . . .
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
02-ஜூலை-202016:15:00 IST Report Abuse
 N.Purushothaman நல்ல காமடி ..ஆன்டி ஜென் பரிசோதனையை தொற்று வேகமாக பரவும் மாநிலங்களுக்கு விரிவுபடுத்த ஏற்கனவே முடிவு செய்துள்ளது ..காக்கா ஒக்கார பனம்பழம் விழுந்த கதை தான் ...
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
02-ஜூலை-202009:38:31 IST Report Abuse
Balasubramanian Ramanathan பேசியது எல்லாம் வக்கனையாகத்தான் இருக்கு ஆனால் பணி செய்ய வரும் ஊழியர்களை தெருவுக்குள் விடாமல் செய்து விட்டேன் என மாரதட்டி கொள்ளூம் கொள்கைய விடவேண்டும். Avoid ஓவர் ஆக்டிங்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X