'ஹாங்காங்கை சீனா விழுங்குவதை வேடிக்கை பார்க்க முடியாது: மைக் போம்பியோ

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

வாஷிங்டன்; ''சீனா, தேசிய பாதுகாப்பு சட்டம் மூலம், ஹாங்காங்கை விழுங்குவதை வேடிக்கை பார்க்க முடியாது,'' என, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் போம்பியோ எச்சரித்துஉள்ளார்.



latest tamil news



சீனாவின், தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழு, ஹாங்காங்கில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, நேற்று சீன அதிபர் ஜின்பிங் கையொப்பத்துடன், இந்த சட்டம், ஹாங்காங்கில் நடைமுறைக்கு வந்தது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி அறிமுகப்படுத்ப்பட்ட இந்தச் சட்டம், பிரிவினைவாத பிரசாரத்தை, பயங்கரவாத நடவடிக்கையாக கருதி, தண்டிக்க வகை செய்கிறது.இதனால், ஹாங்காங்கில், சீனாவுக்கு எதிராக போராடுவோர் மீது, அடக்குமுறையை கட்டவிழ்த்து விட வாய்ப்பு உள்ளது. அத்துடன், தேசத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், போராட்டக் காரர்களை, 10 ஆண்டு கள் சிறையில் அடைக்கவும், இந்த சட்டம் வகை செய்கிறது. குற்றவாளிகளை நாடு கடத்தவும், இந்த சட்டம் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சட்ட அமலாக்கத்திற்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.


அமெரிக்கா ஆதரவு

இது குறித்து, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் போம்பியோ கூறியதாவது:தேசிய பாதுகாப்பு சட்டம் அமலான நாள், ஹாங்காங் மக்களுக்கும், சீனாவில் சுதந்திரத்தை விரும்புவோருக்கும் ஒரு சோகமான நாள். சீனா, ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமையை அழித்து, சாதனை படைத்துள்ளது. ஹாங்காங்கை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் விழுங்கப் பார்க்கும் சீனாவின் நடவடிக்கையை, அமெரிக்கா அனுமதிக்காது. ஹாங்காங் மக்களின் சுதந்திரம், பேச்சுரிமைக்கு எதிராக, சீனா எடுக்கும் நடவடிக்கைக்கு, தகுந்த பதிலடி கொடுக்கப்படும். ஹாங்காங் மக்களுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்.ஹாங்காங் மக்களுக்கு, 50 ஆண்டுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை, 23 ஆண்டுகளில், சீனா காற்றில் பறக்க விட்டு விட்டது. அதுமட்டுமன்றி, உலக சுகாதார அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு, ஐ.நா., ஆகியவற்றுடன் செய்து உள்ள ஒப்பந்தத்தையும் சீனா மீறியுள்ளது. இதை, உலக நாடுகள் ஒருபோதும் ஏற்காது.

ஹாங்காங்கிற்கு எதிராக செயல்படும் சீன அதிகாரிகளின் விசாவுக்கு, அமெரிக்கா தடை விதித்து உள்ளது. பார்லி.,யில் தாக்கல்தற்போது, ஹாங்காங்கிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், சீனாவுக்கு மேற்கொள்ளும் ஏற்றுமதி, மறு ஏற்றுமதி உள்ளிட்ட உரிமங்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனா, உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை வாபஸ் பெற்று, ஹாங்காங் மற்றும் உலக நாடுகளுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news


இதற்கிடையே, சீனாவின் அடக்குமுறையால் ஹாங்காங்கில் இருந்து வெளியேறுவோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் அகதிகள் அந்தஸ்து வழங்குவதற்கான மசோதா, அமெரிக்க பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டம் அவசியம்ஹாங்காங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட, 23வது ஆண்டு விழா, நேற்று ஹாங்காங்கில் கொண்டாடப்பட்டது. இதில், ஹாங்காங் செயல் நிர்வாக தலைவர், கேரி லேம் பங்கேற்று, சீன தேசிய கீத பின்னணியில், தேசிய கொடியேற்றி உரையாற்றினார். அப்போது, ''ஹாங்காங் குழப்பத்திற்கு தீர்வு காணவும், ஸ்திரத்தன்மையை பராமரிக்கவும், தேசிய பாதுகாப்பு சட்டம் காலத்தின் கட்டாயம்,'' என, அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanathan Muthiah - Madras,இந்தியா
02-ஜூலை-202022:09:51 IST Report Abuse
Ramanathan Muthiah எல்லோருக்கும் வரலாறு தெரியும், ஒரு காலத்தில் ஜெர்மானியர் நாஜி படை ஹிட்லரின் தவறான அனுகுமுறையால் இரண்டாம் யுத்தம் வந்தது. ஏன்? ஹிட்லர் போலந்தை கைப்பற்றி அத்துடன் விடாமல், ரஷ்யாவையும் கைப்பற்ற துடித்து ஸ்டாலின்குர்டு வரை சென்று கடைசியில் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் நேச படைகளுடன் ஜெர்மனி ஹிட்லராய் வீழ்த்தி உலக யுத்தம் முடிவுக்கு வந்தது. 1945,வருடம். அதே மூலத்தை பின்பற்றி சீனாவும் இப்பொது அதன் பக்கத்துக்கு நாடுகளை பிடிக்க போர் உத்தியை ஜெர்மானிய போல 3.ராம் உலக போருக்கு வழி செய்கிறது. போலந்து போல இப்பொது ஹாங்காங் மற்றும் இந்தியா எல்லை, தென் சீன கடல் எல்லை, மற்றும் தெற்காசிய நாடுகள்.உலக நாடுகள் எல்லாம் சீனா மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். பொறுத்திருந்து பாப்போம், சீனா எவ்வளவு தூரம் செல்கிறது என்று
Rate this:
Cancel
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
02-ஜூலை-202021:00:24 IST Report Abuse
l vijayaraghavan அது சரி தான். இன்று சீனா உலகம் முழுவதையும் வஞ்சகமாக கொரோனால உட்பட பலவகையில் படுகுழியில் தள்ளப் பார்க்கிறதே அதற்கு இத்தகைய சவால்களை, நெருக்கடிகளை கொடுப்பதில் என்ன தவறு எந்த விஷயத்திலும் விதிவிலக்கு உண்டு. அதுவும் சப்பை மூக்கன் விஷயத்தில் எதை வேண்டும் என்றாலும் செய்யலாம் அவன் அப்பேர்பட்டவன். சந்தேகமே இல்லை. நம்மூர் காஷ்மீர் விவகாரத்தில் சப்பை மூக்கன் உள்பட எத்தனை பேர் மூக்கை நுழைத்தார்கள் நுழைத்து க்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா ? நம்ப என்ன சப்பை மூக்கன் மாதிரியா?.
Rate this:
Cancel
விமர்சகன் - kovai,இந்தியா
02-ஜூலை-202018:26:22 IST Report Abuse
விமர்சகன் இத நீ சொல்ற. ஈராக்குல உட்கார்ந்துகிட்டு நீ பண்ற அட்டூழியம் கொஞ்சமா. அந்த நாடு பாராளுமன்றம் நீ வெளிய போன்னு தீர்மானம் போட்டும் அங்கே இருக்குற பெட்ரோல ஆட்டய போட்டுகிட்டு இருக்க. இது போக ஆப்கானிஸ்தான் சிறியா லிபியா இன்னும் பல தேசங்கள் சொல்லில் அடங்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X