வியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 போலீசார் கைது

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (144) | |
Advertisement
திருநெல்வேலி: சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ., ரகுகணேஷ், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோரை கைது செய்தனர். தூ த்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்திவந்த ஜெயராஜ் 60, அலைபேசி கடை நடத்திவந்த அவரது மகன் பென்னிக்ஸ் 31, ஊரடங்கு காலத்தில்
Sathankulam, Tuticorin custodial case, Sathankulam custodial death, Sathankulam cops, P Jayaraj, J Beniks,  சாத்தான்குளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருநெல்வேலி: சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ., ரகுகணேஷ், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
தூ த்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்திவந்த ஜெயராஜ் 60, அலைபேசி கடை நடத்திவந்த அவரது மகன் பென்னிக்ஸ் 31, ஊரடங்கு காலத்தில் நீண்டநேரம் கடையை திறந்திருந்ததாக, ஜூன் 19ல் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரவில் விசாரணையின்போது கடுமையாக தாக்கினர். பின்னர் மறுநாள் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அங்கு அடுத்தடுத்து தந்தை, மகன் இறந்தனர். இந்த வழக்கு சிபிஐ.,க்கு மாற்றப்பட்டது.


latest tamil news
தொடர்ந்து எஸ்.ஐ.கள், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார், முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 6 போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதில் எஸ்.ஐ., ரகு கணேஷ் நேற்று(ஜூலை1) கைது செய்யப்பட்டார். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து தூத்துக்குடி கோர்ட் உத்தரவிட்டது. வரும் 16ம் தேதி அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.மற்றவர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை இன்று காலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்பி செல்ல முயன்றார். இதனையடுத்து கோவில்பட்டியில் அவரை பிடித்த சிபிசிஐடி அதிகாரிகள், அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (144)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KNR - Chennai,இந்தியா
06-ஜூலை-202018:57:15 IST Report Abuse
KNR நீதி வெல்வது கடினம்...
Rate this:
Cancel
KNR - Chennai,இந்தியா
06-ஜூலை-202013:41:46 IST Report Abuse
KNR வழக்கின் தன்மை நீர்த்துவிடக்கூடாதென்று சிலை கடத்தல் வழக்கில் அரசை நம்பாமல் திரு பொன் மாணிக்கவேலை தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்யத்தெரிந்த உயர்நீதிமன்றத்திற்கு, மதுரை கிரானைட் கற்கள் ஊழல் வழக்கில் திசை மாறிவிடக் கூடாதென்று அரசையும் மீறி திரு சகாயத்திற்கு நற்பணியாளர் நேர்மையானவர் என்று பணி நீட்டிப்பை தொடரச்செய்த உயர்நீதிமன்றத்திற்கு, சாத்தான்குள வழக்கில் அரசின் மெத்தனத்தையும், வழக்கின் கொடூரம் உணர்ந்து ஊடகங்களினால் அறிந்து தானாக வழக்கை கையில் எடுத்த உயர்நீதிமன்ற (மதுரை கிளை) நீதிபதியை வழக்கின் தன்மையை உணர்ந்து பணியிடமாற்றம் வழக்கமான தென்றாலும் அதை சிறப்பு உத்தரவின் மூலம் தவிர்த்து, அவரை இவ்வழக்கின் தீர்ப்பு வரை அந்த கிளையிலேயே நீடிக்க செய்ய தெரிய மனமில்லையா... என்கிற கேள்வி 99% மக்களுக்கு எழ வாய்ப்புண்டு.... அவர்கள் மனதை ஊடகமும், சமூக ஊடகமும் வெளிகொண்டு வர வாய்ப்புண்டு என்பதை மாண்புமிகு நீதிமன்றம் உணரவேண்டும். உணரவில்லை என்றால் மக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் உள்ள நம்பிக்கை தகர்ந்துவிடும் என்பதே ஜனநாயகம் உணரவேண்டிய உண்மை. ஊழல் நடிகையின் சொத்துகுவிப்பு வழக்கில் ஒரு குமாரசாமி என்கிற கணக்கியல் மேதை, வடக்கில் அப்துல் கலாமிற்கே பிடிஆணை வழங்கிய குஜராத் நீதிமன்ற நடுவர் என்று ஏற்கனவே நீதிமன்ற பிறழ்வுகள் உள்ள நிலையில் இதுபோன்ற கொடூர வழக்கில் நேர்மையானவர் என தெரிந்தும் வழக்கமான மாற்றல்கள் என சப்பைக்கட்டுவது அரசின் செயல்பாடுகள் மீதும் நீதிமன்றத்தின் மீதும் அவநம்பிக்கையை தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை. பொதுமக்களின் ஐயங்கள் பொதுவெளியில் வெளிப்படுவது தவறான முன்னுதாரணம் என கட்டுப்படுத்துவது சர்வாதிகாரம் என்று கூறப்படுவதில் தவறில்லை. ஏற்கனவே இந்த கொடூர வழக்கை ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரிதாக்கி விட்டார்கள், இது திமுக சதி என்று கொல்லப்பட்டவர்களை அசிங்கப்படுத்தினார் பாஜகவின் மாநில தலைவர் முருகன் அவர்கள். அவருடைய கட்சியின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு கிடைக்கும் சசிகலாவின் தம்பிகள் ஆட்சி துவக்கத்தில் இருந்தே பலவிஷயங்களை இந்த வழக்கில் மறைக்க முயற்சி செய்தது, லாக்கப் மரணம் என்பது லாக்கப்பில் இறப்பது, லாக்கப்பில் அடிக்கப்பட்டாலும் மருத்துவமனையில் இறந்தால் அது லாக்கப் மரணம் அல்ல, மருத்துவமனையில் நிகழ்ந்த இயற்கை மரணம் என அறிக்கை கொடுத்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தான் தெர்மோகோல் அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்று நிரூபித்த இந்த வேளையில் அரசும் நீதிமன்றங்களும் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்துக்கொள்ள வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ள எந்த கட்சியையும் சாராத ஜால்றா அடிக்காத பொது ஜனங்களின், பாமர மக்களின் வேண்டுகோள்...
Rate this:
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
03-ஜூலை-202008:27:28 IST Report Abuse
Sankare Eswar இவர்களுக்கு உடந்தையாக இருந்த பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ், இந்த மாபெரும் குற்றத்தை மூடி மறைத்து, கண்டும் காணமால் தத்தம் கடமையில் தவறி குற்றவாளிகளை தப்பிக்க உதவி புரிந்த அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X