பொது செய்தி

இந்தியா

பாக்., மூலம் பொம்மலாட்டம்: சீனாவின் புதிய தந்திரம்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவுக்கு எதிராக உள்ள அண்டை நாடுகளை திரட்டும் முயற்சியின் அடுத்தக் கட்டத்துக்கு, சீனா சென்றுள்ளது. இதற்காக, பாக்., பிரதமர் இம்ரான் கானை, தன் கைப்பாவையாக பயன்படுத்த உள்ளது.



latest tamil news


இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. 'பதற்றத்தை தணித்து, அமைதி திரும்ப வேண்டும்' என, சீனா கூறி வருகிறது. ஆனால், அது தொடர்ந்து படைகளை குவித்து வருவது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான நேபாளமும், சீனாவின் துாண்டுதலால், நம் நாட்டுக்கு எதிராக, திடீரென எல்லைப் பிரச்னையை கொண்டு வந்தது. 'உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலெக் ஆகியவை தன் பகுதிகள்' என, நேபாளம் கூறியது. மேலும், இந்தப் பகுதிகள் அடங்கிய புதிய தேசிய வரைபடத்தையும், நேபாளம் வெளியிட்டுள்ளது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் தனக்கு எதிர்ப்பு எழுந்து, பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படலாம் என்ற நிலையில், அதை திசை திருப்ப, அந்நாட்டு பிரதமர், கே.பி.சர்மா ஒலி, இந்தியாவுக்கு எதிரான கோஷத்தை கையில் எடுத்தார். ஆனால், 'கட்சிப் பதவி அல்லது பிரதமர் பதவியில் ஏதாவது ஒன்றை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்' என, அவருக்கு எதிராக கட்சியில் எதிர்ப்பு வலுக்கிறது.

ஒலிக்கு எதிராக, கட்சியின் மூத்த தலைவரான, புஷ்ப கமல் தாஹல் பிரசந்தா, மிகத் தீவிரமாக உள்ளார். 'என்னை பதவியில் இருந்து நீக்க இந்தியா சதி செய்கிறது' என, பொதுவான குற்றச்சாட்டை, ஒலி முன்வைத்துள்ளார். அதேபோல், மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும், நம் நாட்டுக்கு எதிராக எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பில் உள்ளது.


latest tamil news



குற்றச்சாட்டு:


இம்ரான் கானின் பிரதமர் பதவி மீது, கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும், ராணுவத்தின் கை ஓங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், 'பாகிஸ்தான் பங்குச் சந்தையில் நடந்த குண்டு வெடிப்புக்கு, இந்தியாவே காரணம்' என, இம்ரான் கான், பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக செயல்படும்படி, சர்மா ஒலியை, சீனா தான் துாண்டி விட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. 'பிரதமராக ஒலி நீடித்தால் தான், இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க முடியும்' என, சீனா நினைக்கிறது. அதற்காக, தன் கைப்பாவையாக, இம்ரான் கானை சீனா பயன்படுத்தியுள்ளது.


பிரச்னை:


நேபாள பிரதமர், ஒலியுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பேசும்படி கட்டளையிட்டுள்ளது. அதன்படி, இருவரும், இன்று தொலைபேசியில் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவான பிரச்னைகள் ஏதும் இல்லாத நிலையில், இந்த பேச்சு, இந்தியா குறித்ததாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J BASKARAN - Tamilnadu,Chennai,இந்தியா
02-ஜூலை-202017:47:05 IST Report Abuse
J BASKARAN ஜெய் ஹிந்தி வாழ்க நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி. அவர் புகழ் ஓங்குக வலிமையான பாரதம்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
02-ஜூலை-202016:35:07 IST Report Abuse
elakkumanan எச்சில் இலையையே போட்டாலும், ஹோட்டல் காரனுக்கு நாய் நன்றியோடு இருக்கும் என்பது உலக நியதி......................
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஜூலை-202016:23:59 IST Report Abuse
Endrum Indian சர்மா ஒலி, இந்தியாவுக்கு எதிரான கோஷத்தை? ஒலி - கோஷம் இது இயற்கையின் இணைப்பு தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X