பொது செய்தி

தமிழ்நாடு

‛கொரோனா இறப்பு அதிகாலையில் தான் அதிகம்': மருத்துவ கல்வி இயக்குனர்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
coronavirus, covid 19, corona, coronavirus death, கொரோனா, இறப்பு, அதிகாலை, அதிகம், மருத்துவ கல்வி, இயக்குனர், ஓமந்தூரார், மருத்துவக்கல்லூரி, டீன், நாராயணபாபு

சென்னை: ''கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அதிகாலை நேரத்தில் தான் இறப்பு ஏற்படுகிறது. எனவே அந்த நேரத்தில் கண்காணிப்பதற்காக மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது'' என மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறினார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய டாக்டர்கள் தினம் நேற்று (ஜூலை 1) கடைபிடிக்கப்பட்டது. அந்த மருத்துவமைனையின் டீன் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனரான நாராயணபாபு தலைமையில் டாக்டர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

பின் டாக்டர் நாராயணபாபு அளித்த பேட்டி: ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது. இதுவரை 9228 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அதில் 6012 பேர், அதாவது 65 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 461, பேர் கொரோனா சிகிச்சை மையத்தில் 615 பேர்; வீட்டு கண்காணிப்பில் 2099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலோனாருக்கு அதிகாலை நேரத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலால் மரணம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளை கண்காணிக்க இரவு 7:00 முதல் அடுத்த நாள் இரவு 7:00 மணி வரை என சுழற்சி முறையில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
02-ஜூலை-202018:41:10 IST Report Abuse
S. Narayanan அதி காலையோ பகலோ இறப்பு எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேதான் போகிறது.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
02-ஜூலை-202018:20:11 IST Report Abuse
அசோக்ராஜ் ஏன்யா உயிர வாங்குறீங்க? இளைஞர்களைத் தாக்காதுன்னு அறிக்கை விட்டீங்க. டோப்பா வாங்கிப் போட்டு மேக்கப் செஞ்சு ஒரு மாதிரியா இளைஞன் ஆனேன். இப்போ அதிகாலையில் தான் தாக்குதல் அதிகம்னு அறிவிக்கறீங்க. வூட்ல எல்லா கடிகாரத்தையும் செட்டிங் மாத்தித் தொலையறேன். வேறெப்படித்தா தப்பிக்கிறது? பஹூத்தறிவுக்கே கரோனா சவால் விடுதே? ஐயகோ
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
02-ஜூலை-202013:16:28 IST Report Abuse
siriyaar ஆஸ்பத்திரியில் ஹீட்டர் மாட்டவேண்டும். 33 டீக்கரிக்கு போல் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X