பொது செய்தி

தமிழ்நாடு

இளம் வயதினரை அதிகம் குறி வைக்கும் கொரோனா

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
madurai news, madurai, coronavirus, coronavirus madurai, tamil nadu news, மதுரை, கொரோனா, பாதிப்பு, இளவயது, 20 முதல் 50 வயது

மதுரை: மதுரையில் பெரும்பாலானோர் 20 முதல் 50 வயதை உடையவர்களே அதிகமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மதுரையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் 80 சதவீதத்தை மாநகராட்சி சுமக்கிறது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டோரை கொரோனா எளிதில் தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவர்கள் வீடுகளை விட்டு வெளி வருவதில்லை. மற்ற வயதினர் தெருக்களில் நடமாடுவது அதிகம். 20 முதல் 50 வயதிற்குள்ளோர் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கற்பனை செய்கின்றனர். கொரோனாவிடம் பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் இவ்வயதினர் அதிகம் பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.


latest tamil news



இளவயதினர் அதிகம் பாதிப்பு


ஜூன் 29 தேதி வரையிலான பாதிப்பு பட்டியலில் மாநகராட்சியில் 1627 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 1 முதல் 20 வயதுள்ளோர் எண்ணிக்கை 172, 21 முதல் 50 வயதினர் 1017 பேர், அதற்கு மேற்பட்டவர்கள் 438 பேர் உள்ளனர். இளவயதினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா முதியவர்கள், பிறநோய் இருப்பவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். இது வயது வேறுபாடின்றி தாக்கும். இளவயதினர் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள்' என்றனர்.


மதுரை மாநகராட்சியில் வயது வாரியாக பாதித்தோர் பட்டியல்:


வயது - பாதித்தோர்
1 முதல் 10 - 55 பேர்
11 முதல் 20 - 117 பேர்
21 முதல் 30 - 347 பேர்
31 முதல் 40 - 350 பேர்
41 முதல் 50 - 320 பேர்
51 முதல் 60 - 269 பேர்
61 முதல் 70 - 146 பேர்
70க்கு மேல் - 23 பேர்
மொத்தம் - 1627 பேர்

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
03-ஜூலை-202015:17:40 IST Report Abuse
இந்தியன் kumar மதுவை தவிர்த்து மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றினால் நம்மை கோரோனோ அணுகாது.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-ஜூலை-202011:33:17 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஒழுங்காக எவனும் ஷேவ் பண்றது இல்லீங்க குளிக்கறதும்கிடையாது தாடியும் மீசையுமா பாக்கவே பிச்சைக்கார போல திருயுறானுக சுத்தம் கிடையாவேகிடையாது வாயிலே எப்போதும் பீடி சிகரெட்டு இதுகளுக்குகென்சர் வருமோ இல்லியோ சுத்திநிற்கும் ஆப்பாவிகளுக்கெல்லாம் வந்துரும் பாதிக்கும் மேல ஒற்றபிள்ளைகள் என்பதும் உண்மை வீட்டுலே கூடாப்பழக்க சமவாயதினர் இல்லே என்பது உண்மை சிம்=நிமால் ஹீரோக்குடிச்சால் புகைச்சல் அதைப்பாத்துட்டுஇந்தசமர்த்துக்களும் வாயிலே கொள்ளிக்கட்டையுடன் சுத்துறதுகள் வீட்டுலே தங்கரவா எவ்ளோபெருங்க பைக்லேஉக்காந்துபிடிக்கறவன் போயின்நெபிடிக்குறவன் எல்லோரும் சுயமா தானே தனக்கு கொள்ளிபோட்டுகிறானுக
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
02-ஜூலை-202018:37:44 IST Report Abuse
S. Narayanan இளம் வயதுக்காரர்களை பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X