பொது செய்தி

இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 13 % மட்டுமே இலவச உணவு தானியங்கள் விநியோகம்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே விநியோகம் செய்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். அவர்களுக்கு உதவிடும் வகையில், உணவு தானிய கிடங்குகளில் இருந்து தானியங்கள்
Migrant Workers, Free Food Grain, migrants

புதுடில்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே விநியோகம் செய்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். அவர்களுக்கு உதவிடும் வகையில், உணவு தானிய கிடங்குகளில் இருந்து தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை பெற்று நாடு முழுவதும் உள்ள 8 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்குள் வினியோகம் செய்யவேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், மத்திய அரசு அல்லது மாநில அரசின் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் உணவு தானியங்கள் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இத்திட்டத்தின் மூலம் மஹாராஷ்டிராவில் 70 லட்சம் பேர், கர்நாடகாவில் 40.19 லட்சம், தமிழகத்தில் 35.73 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.


latest tamil news


ஆனால் இதற்காக ஒதுக்கப்பட்ட 8 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களில் மே மற்றும் ஜூன் மாதங்களில் வெறும் 13 சதவீதம் மட்டுமே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அடைந்துள்ளது என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களின்படி, ரேஷன் அட்டை இல்லாத சுமார் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மே மாதம் 1.21 கோடி பயனாளிகளும், ஜூன் மாதத்தில் 92.44 லட்சம் பயனிகளும் என மொத்தமே 2.13 கோடி பேர் மட்டுமே பயனடைந்து உள்ளனர்.


latest tamil news


அமைச்சகத்தின் தரவுகளின்படி, அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 6.38 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் ஜூன் 30 வரை 1.07 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை மட்டுமே அதாவது 13 சதவீத பயனாளிகளுக்கு மட்டுமே விநியோகித்துள்ளனர்.


latest tamil news


தமிழகம், ஆந்திரா, கோவா, குஜராத், ஜார்க்கண்ட், லடாக், மஹாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் ஆகியன அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தானிய அளவை விட உயர்த்தி பெறப்பட்டாலும், உயர்த்திய அளவுகளில் அதில் 1 சதவீதம் அளவிற்கு கூட பயனாளிகளுக்கு விநியோகிக்கவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202017:49:10 IST Report Abuse
ஆப்பு gst வருமானத்தை மத்திய அரசு எடுத்துக்குமாம். மாநில அரசுகள் வெளிமாநில ஆளுங்களுக்கு குடுக்கணுமாம். அப்போ, மாநில அரசுகளுக்கு எவன் ஓட்டுப் போடுவான்? ஒரே நேஷன்... ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வந்தா இன்னும் வில்லங்கமாயிடும். எல்லாமே பிரதான் மந்திரிக்கி ரேஷன் கல்யாண் அபியான் யோஜனான்னு பேர் வெச்சு பிராந்திய கட்சிகளை ஒழிச்சு கட்டிர ஏற்பாடு நடக்குது.
Rate this:
Cancel
02-ஜூலை-202017:43:55 IST Report Abuse
ஆப்பு 80 கோடி ஏழைங்களுக்கு அள்ளிக் குடுத்ததா அடிச்சு உட்டாரே...
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
02-ஜூலை-202017:29:12 IST Report Abuse
தமிழர்நீதி பேசாமல் தாய்லாந்திலிருந்து காளான் வாங்கி கொடுத்து பசியாற்றலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X