பொது செய்தி

தமிழ்நாடு

அதிக குணமடைந்தோர் விகிதத்தில் தண்டையார்பேட்டை முதலிடம்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020
Share
Advertisement
Chennai, Corona Cases, Ratio, recovery rate, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, tondiarpet, சென்னை, கொரோனா, பாதிப்பு, தண்டையார்பேட்டை, குணமடைவோர், விகிதம், மண்டலம்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் அதிக குணமடைந்தோர் விகிதம் கொண்ட மண்டலமாக தண்டையார்பேட்டை உள்ளது. அங்கு 72 சதவீதம் மீட்பு விகிதம் உள்ளது.

சென்னையில் மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னையில் இதுவரை 60,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36,826 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 929 பேர் உயிரிழந்துள்ளனர். 22,777 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 59.27 சதவீதம் ஆண்களும், 40.73 சதவீதம் பெண்களும் உள்ளனர்.


வயது வாரியாக


9 வயதுக்கு உட்பட்டவர்கள் - 2.95 சதவீதம்
10 முதல் 19 வயது - 6.42 சதவீதம்
20 முதல் 29 வயது - 18.1 சதவீதம்
30 முதல் 39 வயது - 18.84 சதவீதம்
40 முதல் 49 வயது - 18.61 சதவீதம்
50 முதல் 59 வயது - 16.92 சதவீதம்
60 முதல் 69 வயது - 10.95 சதவீதம்
70 முதல் 79 வயது - 5.43 சதவீதம்
80 வயதுக்கு மேல் - 1.77 சதவீதம்


latest tamil news




குணமடைவோர் விகிதம்


சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் விகிதத்தில் தண்டையார்பேட்டை மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 72 சதவீதம் அளவிற்கு குணமடைவோர் விகிதம் உள்ளது. அடுத்தபடியாக ராயபுரத்தில் 70 சதவீதமும், தேனாம்பேட்டையில் 67 சதவீதமும், திரு.வி.க.நகரில் 63 சதவீதமும் குணமடைந்துள்ளனர். மிகக்குறைவான விகிதம் (46 சதவீதம்) உடைய மண்டலங்களாக ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்கள் உள்ளன.


இறப்பு விகிதம்


கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதத்தில் மிகக்குறைவான மண்டலமாக சோழிங்கநல்லூர் உள்ளது. அங்கு 0.57 சதவீதம் என்ற ரீதியில் இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது. அடுத்த இடங்களில், வளசரவாக்கம் (1.02). பெருங்குடி (1.09), மணலி (1.10), அம்பத்தூர் (1.12) உள்ளன. திருவொற்றியூர் மண்டலமானது அதிக இறப்பு விகிதம் (2.36) கொண்ட மண்டலமாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X