அரசியல் செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி, உளுந்தூர்ப்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா உறுதி

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பரமக்குடி: பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உளுந்தூர்ப்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்து வருகிறது. இதில், எம்எல்ஏ.,க்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
Paramakudi MLA, coronavirus, covid 19, tamil nadu, aiadmk,
பரமக்குடி, எம்எல்ஏ, கொரோனா, அதிமுக, சதன் பிரபாகர்

பரமக்குடி: பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உளுந்தூர்ப்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்து வருகிறது. இதில், எம்எல்ஏ.,க்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைதொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா உறுதியானது. செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.


latest tamil news


உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மக்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்த பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், உளுந்தூர்ப்பேட்டை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குமரகுருவுக்கும் கொரோனா உறுதியானது. இதனால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஏற்கனவே, ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-ஜூலை-202019:14:25 IST Report Abuse
தமிழவேல் இதுவும் சின்னத்தாத்தா தப்பா இருக்கணும்.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
02-ஜூலை-202015:23:20 IST Report Abuse
Raj குணமடைய வேண்டுதல்கள்
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
02-ஜூலை-202015:07:10 IST Report Abuse
Chandramoulli விரைவில் எல்லோரும் குணமடைய வேண்டும்.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
02-ஜூலை-202017:00:51 IST Report Abuse
Srinivasகொரோனாவுக்கே கொரோனாவா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X