மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம்; 28 பேர் அமைச்சர்களாயினர்| 28 new ministers inducted in Shivraj Singh Chouhan-led Madhya Pradesh cabinet | Dinamalar

மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம்; 28 பேர் அமைச்சர்களாயினர்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (1)
Share
Madhya Pradesh, Cabinet Expansion, Scindia, Gopal Bhargava, Take Oath, Ministers, mp, new ministers, Shivraj Singh Chouhan, Madhya Pradesh cabinet, மத்திய பிரதேசம், அமைச்சரவை, விரிவாக்கம், சிந்தியா, அமைச்சர்கள், பதவியேற்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றி மூன்று மாதங்களாகும் நிலையில், 28 பேர் இன்று (ஜூலை 2) அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் தயவால் நீண்ட காலத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்தது. கமல்நாத் முதல்வராக இருந்தார். ஆனால் அவரது ஆட்சி ஓராண்டுக்குள் முடிவுக்கு வந்தது. காங்கிரஸின் மூத்த தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்து 22 எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ.,வில் ஐக்கியமானார். இதனால் கமல்நாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.


latest tamil newsஇதனைத் தொடர்ந்து மீண்டும் பா.ஜ.,வின் சிவராஜ் சிங் சவுகான் கடந்த மார்ச் மாதம் ம.பி.,யின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் அப்போது 5 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். பின்னர் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியதால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இதனை காங்கிரஸ் கேள்வி எழுப்பி வந்தது. இந்த நிலையில் இன்று யசோதரா ராஜே சிந்தியா உள்ளிட்ட 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


latest tamil newsராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆனந்தி பென் படேல் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர்களில் ஜோதிராதித்யா சிந்தியாவுடன் மார்ச் மாதம் பா.ஜ.,வில் இணைந்த சில முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். சிந்தியாவின் ஆதரவாளர்கள் மேலும் 6 பேர் பின்னர் அமைச்சரவையில் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X