பொது செய்தி

இந்தியா

சியாச்சினை காலி செய்ய பார்த்த காங்.,: மாஜி செயலர் ‛‛திடுக்''

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
india, pakistan, siachein, congress, shyam saran, MK narayanan, pak, border issue, சியாச்சின், இந்தியா, பாகிஸ்தான், காங்கிரஸ், நாராயணன், ஷியாம் சரண்

புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியின் போது, உலகின் மிக உயர்ந்த போர்களமான சியாச்சினில் இருந்து இந்திய ராணுவத்தை விலக்கி கொள்ளும் வகையில், பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால், அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக, முன்னாள் வெளியுறவு செயலாளர் ஷியாம் சரண் எழுதிய ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் வெளியுறவு செயலாளரும், பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருந்த ஷியாம் சரண், எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2006 ம் ஆண்டு, உலகின் மிக உயர்ந்த போர்களமான சியாச்சின் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை நானும், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளராக இருந்த ரியாஸ் முகமது கானும் செய்திருந்தோம். இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய ராணுவமும் ஒப்பு கொண்டது. அந்த பகுதியில் தற்போதுள்ள இரு நாட்டு படைகளின் எண்ணிக்கை, எப்போது வாபஸ் பெறுவது, கண்காணிப்புக்கு கூட்டுக்குழு அமைப்பது போன்ற அம்சங்கள், ஆகியவை ஒப்பந்தத்துடன், கூடுதல் ஆவணங்களாக இணைக்கப்பட்டது.

ஷரத்துகளுக்கு கூடுதல் பலம் அளிக்கும் வகையில், நாங்கள் வலியுறுத்தியபடி, ஒப்பந்தம் மற்றும் கூடுதல் ஆவணத்தில் கையெழுத்திட பாகிஸ்தான் தரப்பும் ஒப்பு கொண்டது. இதன் மூலம் ஆவணம் மற்றும் ஒப்பந்தம் ஆகியவை சட்டப்படி செல்லுபடியாகும். இந்த ஒப்பந்தத்திற்கு முக்கிய துறைகளிடம் ஒப்புதல் பெறும்படி என்னிடம், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக நானும் முக்கிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த மத்திய அமைச்சரவை குழுவில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சகங்களிடம், ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்தினேன்.

ராணுவ தளபதி ஜேஜே சிங் மற்றும் உளவுத்துறை தலைவர்கள் அனைவரும் ஒப்பந்தத்தை ஏற்று கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை ராணுவம் ஏற்று கொண்டதுடன், படைகளை விலக்கி கொள்ளும் நேரம் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான காலகட்டம், கண்காணிப்பு திட்டம் ஆகியவற்றை, ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் உருவாக்கினார். இதற்கு பின்பு, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவிடம்(சிசிஎஸ்) ஒப்புதல் பெறுவது சாதாரண நடவடிக்கையாக இருந்தது.


latest tamil news
2006 மே மாதம், இந்தியா பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு செயலர்கள் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அப்போது, இந்திய தரப்பில் வைக்கப்பட வேண்டிய வரைவு ஒப்பந்தம் மற்றும் ஆவணங்கள் குறித்து, சிசிஎஸ் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த குறிப்புகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் துறைகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கியிருந்தது. இதனால், சிசிஎஸ் ஒப்புதல் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் என்ற எதிர்பா்ரப்பு இருந்தது.

சி.சி.எஸ்., கூட்டம் நடந்த போது, தேசிய பாதுகாப்பு செயலராக இருந்த நாராயணன் பேசும் போது, பாகிஸ்தானை நம்ப முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் ரீதியிலும், பொது மக்களிடத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பும். வடக்கு பகுதியில், இந்திய ராணுவ நிலைகளில், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனக்கூறி தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். அதுவரை, இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்த ராணுவ தளபதி சிங், தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு, நாராயணனுக்கு ஆதரவாக மாறினார்.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல், பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஒப்பந்தத்தை இன்னும் ஆய்வு செய்ய வேண்டும் வரை முடிவு எடுப்பதை ஒத்தி வைத்தனர். இந்த ஒப்பந்தத்தை விரும்பிய மன்மோகன் சிங்கும் அமைதி காத்தார்.

இந்த கூட்டத்தில் மேலும் பேசிய நாராயணன், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையின் போது சியாச்சின் குறித்த விவரத்தை அகற்ற வேண்டும். இதனை டில்லி வரும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலரிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது, குறுக்கிட்ட பிரணாப் முகர்ஜி, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் சியாச்சின் விவகாரமும் இடம்பெற வேண்டும் என முன்னாள் பிரதமர் ராஜிவ் விரும்பியதாக தெரிவித்தார்.

கடந்த 2007 ம் ஆண்டு, எல்லை உள்கட்டமைப்பு பணி குறித்து ஆய்வு செய்ய சியாச்சின் சென்ற போது, ராணுவ வீரர்களை சந்தித்து பேசினேன். அப்போது, அங்கு பணியில் இருந்த ராணுவ வீரர்களிடம், இங்கிருந்து இரு நாட்டு ராணுவமும் விலக்கி கொள்ளலாமா என நான் கேட்டதற்கு, அனைவரும் ஒரு மித்த கருத்துடன் சம்மதம் தெரிவித்தனர்.

நமது ராணுவம் விலக்கி கொள்வதால், பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவுமே என தொடர்ந்து கேட்ட போது, கடந்த ஆண்டுகளில் நமக்கு என்ன நடந்ததோ, அது தான் அவர்களுக்கும் நடக்கும். அதனால், ஊடுருவல் ஏதும் இருக்காது என தெரிவித்தனர்.

2004 ஜனவரியில் இஸ்லாமாபாத் சென்ற, நமது நாட்டு பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் ஆகியோர் காஷ்மீர் குறித்து பேசினர். அது மன்மோகன் ஆட்சி காலத்திலும் நடந்தது. இவ்வாறு ஷியாம் சரண் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
06-ஜூலை-202003:24:02 IST Report Abuse
jagan நாராயணன் அவர்களுக்கு நன்றி. நாம் என்ன தான் ஆரியர் எண்டு தூற்றினாலும் அவர்கள் எப்போதும் தேசபக்தி மற்றும் தொலைக்கு சிந்தனை உள்ளவர்கள் என்பதை மறுக்க முடியாது.
Rate this:
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
05-ஜூலை-202011:53:47 IST Report Abuse
shan ரண் மற்றும் மன்மோஹனுக்கு என்ன முடியும் இந்த மாதிரி தேச துரோக காரியம் செய்ய அம்மா சொன்னால் கேட்டு தானே ஆகணும்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
03-ஜூலை-202012:34:09 IST Report Abuse
Sampath Kumar அப்பா எல்லாம் வாயை மூடிக்கிட்டு கிடந்த இப்பூ மட்டும் ஏன் திறந்த ? யாரு நிர்பந்தம் ? எதுக்கு உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X