ஹாங்காங் விவகாரம்: ஐ.நா.,வில் கவலையை பதிவு செய்த இந்தியா

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஜெனீவா: ஹாங்காங் விவகாரம் தொடர்பாக வெளியாகும் பல்வேறு அறிக்கைகள் கவலையை அளிப்பதாக இருப்பதாக ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் முதன்முறையாக இந்தியா பதிவு செய்துள்ளது.சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழு, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற நேற்று முன்தினம் (ஜூன் 30) ஒப்புதல் அளித்தது. இதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் கையெழுத்திட்டதை அடுத்து
India, UN, Hong Kong, China, Geneva, Human Rights Council meeting, இந்தியா, ஐநா, ஹாங்காங், சீனா

ஜெனீவா: ஹாங்காங் விவகாரம் தொடர்பாக வெளியாகும் பல்வேறு அறிக்கைகள் கவலையை அளிப்பதாக இருப்பதாக ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் முதன்முறையாக இந்தியா பதிவு செய்துள்ளது.

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழு, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற நேற்று முன்தினம் (ஜூன் 30) ஒப்புதல் அளித்தது. இதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் கையெழுத்திட்டதை அடுத்து ஹாங்காங்கில் நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஹாங்காங்கிற்கு சுதந்திரம் கோரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதல் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவுக்கு எதிராக போராடுவோர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விட வழி செய்யும் சட்டத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


latest tamil newsஇந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்று வரும் 44வது ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 3வது கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் ராஜீவ்குமார் சந்தர் பேசியதாவது,'சீனாவின் தன்னாட்சி பெற்ற பிரதேசமான ஹாங்காங் நகரத்தை பெருமளவிலான இந்திய சமூகத்தினர் தங்கள் வீடாக கருதி வருகின்றனர். சமீபத்தில் அங்கு நடைபெற்று வரும் நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய நிலவரம் குறித்து கவலை தெரிவிக்கும் பல அறிக்கைகள் கேள்விப்படுகிறோம். இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர், இந்த கருத்துகளை கணக்கில் எடுத்து கொண்டு, முறையாகவும், தீவிரமாகவும் மற்றும் நோக்கங்களை தீர்த்து வைப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்'. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
03-ஜூலை-202013:55:41 IST Report Abuse
ponssasi முதல் முறையாக சீனாவிற்கு எதிராக சர்வதேச அரங்கில் தனது எதிர்ப்பை இந்தியா பதிவுசெய்துள்ளது வரவேற்கத்தக்கது
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
02-ஜூலை-202017:08:36 IST Report Abuse
GMM செவிடன் காதில் சங்கு ஊதி என்ன பயன்? சீனா அவ்வளவு எளிதில் செவி சாயிக்காது. இந்தியாவின் கவலையை மதிக்காது. உலக நாடுகளை மதிக்காது. சீனா கம்யூனிஸ்ட் தலைவர்கள் சர்வ அதிகாரம் பெற்றால், இழக்க விரும்ப மாட்டார்கள்.? திபெத், ஹாங்காங் விடுவிக்க முதலில் அடங்காத நாட்டின் பொருளாதார வலுவை குறைக்க வேண்டும். பாதிப்பு ஏற்படும்( ஹாங்காங் ) நாட்டு மக்களுக்கு உதவ வேண்டும்.
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
02-ஜூலை-202016:52:27 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga சீன அரசு தன்னை சுற்றியுள்ள எல்லா நாடுகளின் நிலப்பரப்பையும் ஆக்கிரமித்துள்ளது. வடக்கில் மங்கோலியா, கம்போடியா, மேற்கில் துர்க்மெனிஸ்தான் தெற்கில் திபேத்து மற்றும் இந்தியா, மியான்மார் என்று எல்லா நாடுகளின் எல்லை தாண்டி ஆகிராமிப்பு செய்துள்ளது. அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், தாய்வான் போன்ற நாடுகளுடன் எப்போதும் சண்டை. எனவே இப்படிப்பட்ட நாட்டுக்கு ஹாங்காங்கை ஒப்படைத்த இங்கிலாந்து தான் குற்றவாளி. ஒப்படைக்கும்போதே, ஹாங்காங்கை தன்னிச்சையாக செயல்படும் பகுதி என்று பிரகடனப்படுத்தி இருக்கவேண்டும். உலக நாடுகள் ஒன்று சேர்ந்து சீனாவை தனிமை படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X