டில்லியில் நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி| Arvind Kejriwal inaugurates India's first plasma bank in Delhi | Dinamalar

டில்லியில் நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (1)
Share
Delhi, Plasma Bank, Launches, Kejriwal, Helpline, Donation, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, டில்லி, முதல்வர், கெஜ்ரிவால், பிளாஸ்மா வங்கி, துவக்கம்

புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு நாட்டிலேயே முதன்முறையாக டில்லியில் பிளாஸ்மா வங்கியை அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் துவக்கி வைத்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. டில்லியில் இதுவரை 89 ஆயிரத்து 802 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,803 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா, தமிழகத்திற்கு அடுத்து டில்லி 3வது இடத்தில் உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்ததில் முடிவுகள் திருப்தியளிக்கும் வகையில் இருப்பதால், அடுத்த 2 நாட்களில் பிளாஸ்மா வங்கி செயல்பட துவங்குமென திங்களன்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.


latest tamil news


அதன்படி, இன்று (ஜூலை 2) டில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மையத்தில், நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்து கெஜ்ரிவால் கூறியதாவது: ‛பிளாஸ்மா வங்கி இன்று முதல் செயல்பட துவங்குகிறது. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி இதுவாகும். இப்போது மக்களுக்கு பிளாஸ்மா கிடைப்பதில் அதிக பிரச்சினை இருக்காது. நீங்கள் உரிய மருத்துவ தகுதியுடன், பிளாஸ்மாவை தானம் செய்ய தயாராக இருந்தால், 1031 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 8800007722 என்ற எண்ணில் எங்களுக்கு வாட்ஸ்அப் செய்யலாம். உங்கள் தகுதியை உறுதிப்படுத்த எங்கள் மருத்துவர்கள் உங்களுடன் தொடர்புகொள்வார்கள்.


latest tamil news


நீங்கள் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர் எனில், உங்கள் வயது 18 முதல் 60 வயது வரையும், உங்களது எடை 50 கிலோவுக்கு மேல் இருப்பின் நீங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை தானம் செய்யலாம். குழந்தை பெற்றெடுத்த பெண்கள் மற்றும் ஒரே நேரத்தில் இரண்டு நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் பிளாஸ்மா தானம் செய்ய தகுதியற்றவர்கள் ஆவர். பிளாஸ்மாவை தானம் செய்ய அனைத்து மக்களையும் ஊடகங்கள் ஊக்குவிக்க வேண்டும். இதனால் பல கொரோனா வைரஸ் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும்'. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X