கொரோனா நிஜமான நிலவரம் - முதல்வரால் அதிகாரிகள் 'கலவரம்'

Added : ஜூலை 02, 2020
Share
Advertisement
வீட்டு வராண்டாவில் அமர்ந்து, 'வாட்ஸ்ஆப்' அப்டேட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.சுடச்சுட காபி, ஊட்டி வறுக்கி கொடுத்து உபசரித்த சித்ரா, ''மருத்துவ குழு, முதல்வரை சந்திச்சு பேசுறதா சொன்னாங்களே, என்னாச்சு,'' என, கேட்டாள்.வறுக்கி ஒன்றை காபியில் ஊற வைத்து சாப்பிட்ட மித்ரா, ''நம்மூரிலும், நோய் தொற்று பாதிப்பு அதிகமாகிட்டு போகுது. உயிர் பலி குறைவா இருக்கறதுனால,
கொரோனா நிஜமான நிலவரம் - முதல்வரால் அதிகாரிகள் 'கலவரம்'

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, 'வாட்ஸ்ஆப்' அப்டேட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.
சுடச்சுட காபி, ஊட்டி வறுக்கி கொடுத்து உபசரித்த சித்ரா, ''மருத்துவ குழு, முதல்வரை சந்திச்சு பேசுறதா சொன்னாங்களே, என்னாச்சு,'' என, கேட்டாள்.
வறுக்கி ஒன்றை காபியில் ஊற வைத்து சாப்பிட்ட மித்ரா, ''நம்மூரிலும், நோய் தொற்று பாதிப்பு அதிகமாகிட்டு போகுது. உயிர் பலி குறைவா இருக்கறதுனால, மாவட்ட நிர்வாகம் ரொம்பவே, 'அசால்ட்'டா இருக்கு. ஊர் முழுக்க நோய் பரவுனதுக்கு அப்புறம்தான், மாவட்ட எல்லையில, சோதனையை கடுமையாக்கி இருக்காங்க,'' என்றாள்.
''கொரோனா பாதிப்பு நிலவரங்களை, தமிழக முதல்வரிடம் தப்பு தப்பா சொன்னதா சொன்னாங்களே,''
''ஆமாக்கா, கலெக்டர் ஆபீசுல நடந்த ஆய்வுக்கூட்டத்துல, கோயமுத்துார் நிலவரத்தை கேட்டிருக்காரு. இ.எஸ்.ஐ., தரப்புல சொன்ன புள்ளிவிபரமும், அரசு
மருத்துவமனை தரப்புல சொன்ன புள்ளிவிபரமும் வேறுபட்டு இருந்துருக்கு. கடுப்பான முதல்வர், 'ஆபீசர்ஸ்சே, மாத்தி மாத்தி சொன்னா, மக்களுக்கும், மீடியாக்களுக்கும் என்ன பதில் சொல்றது'ன்னு சங்கடப்பட்டு பேசியிருக்காரு,''
''மக்களை நேரடியா சந்திக்கலாம்னு, பஸ் ஸ்டாண்டுக்கு போனாரு. அங்கேயும், 'நெகட்டிவ்' ரிசல்ட்டுதான் கெடைச்சது. ரேஷன்ல இலவச பொருள் கொடுக்கறதுனால, அரசாங்கம் மேல, நல்ல அபிப்ராயத்துல பதில் சொல்வாங்கன்னு நெனைச்சாரு. ஆனா, கார்டே இல்லைன்னு சொன்னதும், 'அப்செட்' ஆகிட்டாரு.
இன்னொரு பெண், 'கார்ப்பரேஷன் வேலைக்கு அப்ளை செஞ்சேன்; கெடைக்கலை'ன்னு சொன்னாங்க. ஆய்வு முடியறதுக்கு, பகல், 3:45 மணியாகிடுச்சு. அதுக்குப்பின்னாடி, விருந்தினர் மாளிகைக்கு போயி, லஞ்ச் சாப்பிட்டு, பெருந்துறைக்கு கெளம்பி போனாரு,''
''மத்தியானம் லஞ்ச் தடபுடலா இருந்துருக்குமே,'' என, கிளறினாள் சித்ரா.
''நாட்டுக்கோழி குழம்பு, மீன் வருவல் ஏற்பாடு செஞ்சிருந்தாங்களாம்; ஆளுங்கட்சி வி.ஐ.பி., வீட்டுல இருந்து, ஸ்பெஷலா தயார் செஞ்சு கொண்டு வந்திருக்காங்க,''
''ஆளுங்கட்சி 'மாஜி' கவுன்சிலர் ஒருத்தரு, ஜவுளிக்கடைக்காரரிடம், 50 ஆயிரம் ரூபாய் வாங்கி, அமுக்கிட்டதா கேள்விப்பட்டேன், உண்மைதானா.''
''ஆமா மித்து, நானும் கேள்விப்பட்டேன். மசக்காளிபாளையம் ரோட்டுல இருக்குற அந்த கடை, பட்டுக்கு பேமஸ். தங்கமான அமைச்சரின் மனைவி ரெகுலர் கஸ்டமராம். ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்கள் பலரும், இந்த கடைக்கு வந்துட்டு போவாங்களாம். ஊரடங்கு சமயத்துல கடை மூடியிருந்துச்சு.
'நான் பார்த்துக்கிறேன்; நீ, கடையை திறந்து வியாபாரத்தை பாரு'ன்னு, 'மாஜி' கவுன்சிலர் ஒருத்தரு சொல்லி, கப்பமா, ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கியிருக்காரு. ஊரடங்கை மீறி, கடையை திறந்ததுனால, வருவாய்த்துறை அதிகாரிங்க, 'சீல்' வச்சிட்டாங்க.
ஊரடங்கை தளர்த்தியதும், கடையை திறந்திருக்காரு; 'கொரோனா' ரூபத்துல மறுபடியும் பிரச்னை வந்திருக்கு. ஒரு ஊழியருக்கு நோய் உறுதி செஞ்சதுனால, கார்ப்பரேஷன்ல இருந்து, ஸ்டிக்கர் ஒட்டி, கடையை இழுத்து மூடிட்டாங்க. விரக்தியான கடை ஓனர், ஒரே நேரத்துல அஞ்சு பீர் பாட்டில் வாங்கி, குடிச்சு தீர்த்தாராம்,''
''கொரோனா வைரஸ் ஒருத்தரையும் விடாது போலிருக்கே,'' என்ற சித்ரா, ''கருமத்தம்பட்டியில இருக்கற கம்யூ., கட்சிக்காரர், கம்பெனி கம்பெனியா போயி, கட்டப்பஞ்சாயத்து செஞ்சு பணம் சம்பாதிக்கிறாராம். கரன்சி கொடுக்கலைன்னா, கலெக்டர் ஆபீசுக்கு ஆட்களை திரட்டிட்டு வந்து, மனு கொடுக்குறாராம். அவர் மீது ஏகப்பட்ட புகார் இருக்கறதுனால, கம்யூ., கட்சியில புகைச்சல் ஓடிட்டு இருக்காம்,'' என்றாள்.
''கொரோனா பரவுறதுக்கு முன்னாடி, அ.ம.மு.க.,காரரை சந்திச்சு சால்வை போர்த்துனாரே, அவரைதானே சொல்றீங்க,'' என மித்ரா கேட்க, ''அடடே, எப்படி இவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்ச,'' என, பாராட்டிய சித்ரா, ''நம்மூர்ல காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் மத்தியில போதை கலாசாரம் அதிகமாயிடுச்சாமே,'' என, கிளறினாள்.
''ஆமாக்கா, கேரளாவுல இருந்து வர்றவங்க போதை பொருட்களை கடத்திட்டு வந்து, ஸ்டூடன்ட்ஸ்க்கு விக்கிறாங்களாம். ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற பண்ணை வீடுகள்ல, 'நைட் பார்ட்டி' நடக்குதாம். இது சம்பந்தமா, 'இன்ஸ்டாகிராமில்' தகவல் அனுப்புறாங்களாம். இப்பதான், போலீஸ் தரப்பு மோப்பம் பிடிச்சிருக்கு. சீக்கிரமாவே மொத்த கும்பலையும் துாக்குவாங்கன்னு சொல்றாங்க,''
''ஆனா, ரூரல் எஸ்.பி., வேகம் குறைஞ்சிடுச்சுன்னு பேசிக்கிறாங்களே,''
''அதுவா, அவரு நம்மூருக்கு வந்து மூணு வருஷமாயிடுச்சு. எலக்சன் நேரத்துல எப்படியும் மாத்திடுவாங்கன்னு, துறை ரீதியா நடவடிக்கை எடுக்காம இருக்காரு. அதனால, ரூரல் லிமிட்டுல இருக்கற போலீஸ்காரங்க, ரொம்பவே ஜாலியா இருக்காங்களாம்,''
''அதிருக்கட்டும், செல்வபுரம் லிமிட்டுல, பறிமுதல் செஞ்ச தொகையை கணக்குல காட்டாம, அமுக்கிட்டாங்களாமே,''
''இதெல்லாம், போலீஸ் ஸ்டேஷன்ல வழக்கமா நடக்குறதுதானே! கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஆயுதங்களுடன் அஞ்சு பேரை கைது செஞ்சாங்க. அவுங்க மேல காசு வைச்சு சூதாடுனதா கேஸ் பைல் பண்ணாங்க. ஸ்டேஷன்ல இருக்கற முக்கிய அதிகாரி, ஒரு தொகையை கணக்குல காட்டாம, 'ஒதுக்கி'ட்டாராம்,'' என்ற மித்ரா, ''கார்ப்பரேஷன் சப்ஜெக்ட் எதுவுமே சொல்லலையே,'' என, வம்புக்கு இழுத்தாள்.
''கார்ப்பரேஷன் மேட்டர் கேட்காம, ஒனக்கு துாக்கம் வராதே,'' என்றபடி, ''ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு நெருக்கமா இருக்குற உதவி கமிஷனர், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, 'ரிடையர்மென்ட்' ஆகிட்டார். வி.ஐ.பி., தயவுனால, ரெண்டு வருஷம் கால நீட்டிப்பு செஞ்சாங்க; பதவி காலம் இன்னைக்கு முடியுது. இன்னும் ஒரு வருஷம் ஆட்சி காலம் இருக்கறதுனால, மறுபடியும் நீட்டிப்பு கொடுப்பாங்களான்னு, கார்ப்பரேஷன் வட்டாரமே எதிர்பார்த்துட்டு இருக்கு. இதை கேள்விப்பட்டு, தி.மு.க., காரங்க எதிர்ப்பு குரல் எழுப்பியிருக்காங்க,''
''ஆனா, இதே மாதிரி, தி.மு.க., ஆட்சிக்காலத்திலும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு காலநீட்டிப்பு செஞ்சு, அரசாணை வெளியிட்டிருக்காங்க. இப்படியொரு கலாசாரத்தை துவக்கி வச்சதே, தி.மு.க.,தான்னு, ஆளுங்கட்சி தரப்புல திருப்பி அடிப்பாங்க போலிருக்கு,'' என்றபடி, 'டிவி'யை, 'ஆன்' செய்தாள் சித்ரா.
'கொரோனா' பாதிப்பு நிலவரங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. அதை கவனித்த மித்ரா, ''ஆளுங்கட்சி தரப்புல, எலக்சனுக்கு இப்பவே ரெடியாக ஆரம்பிச்சிட்டாங்களாமே,'' என, கேட்டாள்.
''ஆமாப்பா, கட்சி ரீதியா பலப்படுத்திட்டு இருக்காங்க. கார்ப்பரேஷன் லிமிட்டுல, 100 வார்டு இருக்கு. வார்டுக்கு ஒரு செயலாளர் இருக்காங்க; 'மைக்ரோ' லெவல்ல வேலை செய்யணும்ங்கிறதுக்காக, இன்னொரு செயலாளர் நியமிக்கிற வேலையை ஆரம்பிச்சிருக்காங்களாம். இதே மாதிரி, பி.ஜே.பி., தரப்பிலும், ஏரியா வாரியா பிரிச்சு, நிர்வாகிகள் நியமிச்சுட்டு வர்றாங்களாம்,''
''அதிருக்கட்டும், கொஞ்ச நாளைக்கு முன்னாடி, 13 மாடு இறந்துச்சே; ஏதாச்சும் ஆக் ஷன் எடுத்தாங்களா,'' என, பழசை கிளறினாள் மித்ரா.
''அடடே, மறந்தே போச்சு பார்த்தியா. இந்த பிரச்னை பூதாகரமா வெளிச்சத்துக்கு வந்ததும், துறை ரீதியா விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டாரு. விசாரணை நடந்துனாங்க; அறிக்கை சமர்ப்பிச்சாங்க. ஆனா, ஒருத்தர் மேல கூட நடவடிக்கை எடுக்கலை. ஊழலும், முறைகேடும் அனைத்து மட்டத்திலும் புரையோடி போயிருக்கு போல,'' என, நொந்து கொண்டாள் சித்ரா.
''அக்கா, கலெக்டர் ஆபீசுல கோலாச்சுக்கிட்டு இருக்குற ஒரு அதிகாரிக்கு, ஓடடல் உரிமையாளர் ஒருத்தரு, அபார்ட்மென்ட்டுல ரூம் போட்டு கொடுத்திருக்காராம். அங்க வச்சு, கட்டப்பஞ்சாயத்து செய்றாங்களாம்; மிரட்டுறதுக்கே ஒரு குரூப் வச்சிருக்காராம். தி.மு.க., அனுதாபியான அவரு, ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவரு போல, இப்ப, வேஷம் போடுறாராம்,'' என, பொடி வைத்து, பேசினாள் மித்ரா.
அதை, காதில் வாங்கிக் கொண்டே, 'டிவி'யை, மியூசிக் சேனலுக்கு மாற்றி விட்டு, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X