ஏழைகளின் உயிர்நாடியை பறிக்கும் மத்திய அரசு: ராகுல்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
Rahul, Railways, Privatisation, Privatising trains, govt, poor, Rahul Gandhi, ராகுல், ரயில்வே, தனியார்மயம், ஏழைகள், உயிர்நாடி

புதுடில்லி: நாட்டின் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு, ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்ததை கண்டித்த காங்., எம்.பி., ராகுல், ‛ஏழைகளின் உயிர்நாடியை மத்திய அரசு பறிக்கப் பார்ப்பதாக' குற்றம்சாட்டினார்.

இந்தியாவில் பயணியர் ரயில் போக்குவரத்தில் ஆண்டிற்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதால், சில வழித்தடங்களில் தனியார் ரயிலை இயக்க அனுமதி வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், நாட்டின் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு, மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. 109 வழித்தடங்களிலும், அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த, 150 ரயில்கள் இயக்கப்படும். தனியார் துறை முதலீடு மூலம், ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் என எதிர்பார்க்கப்படுவதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


இது தொடர்பாக காங்., எம்.பி., ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ரயில்கள் மட்டும்தான் ஏழைகளின் உயிர்நாடியாக இருப்பவை. அதையும் அவர்களிடம் இருந்து மத்திய அரசு பறிக்கப்பார்க்கிறது. உங்களுக்கு என்ன தேவையோ அனைத்தையும் பறித்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த தேசத்தின் மக்கள் உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Chennai,இந்தியா
02-ஜூலை-202022:41:40 IST Report Abuse
Baskar யார் இந்த ஏழை குடிமகன் ராகுல் ? எதற்காக இவர் ரயிலில் செல்ல வேண்டும் என்று வாதிடுகிறார் ?
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
02-ஜூலை-202022:35:35 IST Report Abuse
mohankumar என்ன பண்றீங்க எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லிட்டு தான் செய்யணும் . மண்ணு மோகன் இருந்த போது எங்க வீட்டுக்கு வந்து வரிசையில் நின்று என் மம்மியிட்ட சொல்லிட்டு என்கிட்டேயும் சொல்லி என்கிட்டே பெர்மிஸ்ஸின் வாங்கிட்டு என் கலீல் விழுந்து ஆசிர்வாதம் எல்லாம் வாங்கிட்டு அப்புறம் நாங்களும் சீனாவும் சேர்ந்து எழுதி கொடுத்ததை தான் செய்வார் . இந்த மோடி என்ன கொஞ்சம் கூட மரியாதையை இல்லாம தன் இஷ்டத்திற்கு நடந்துக்குறார் . மண் மோகன் செரொண்டோர் மோகன் அல்ல மோடி தான் செரொண்டோர் மோடி. எனக்கு கேள்வி கேக்கத்தான் தெரியும் .
Rate this:
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
02-ஜூலை-202022:25:04 IST Report Abuse
jambukalyan நீ உன் சகோதரியை அரசு பங்களாவை காலி செய்யச் சொன்னது பற்றி “ஏழைகளின் உயிர் நாடியை மத்திய அரசு பறிக்கிறது” என்கிறாயோ?
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
03-ஜூலை-202013:01:26 IST Report Abuse
s.rajagopalan'இன்றய செய்திகள்' என்ற தலைப்பில் பதிரிகைகள் வருகின்றன ,,அதே போல் 'இன்றய உளறல்கள்' என்ற தளவப்பில் நம்ம பப்பு, ஸ்டாலின் செய்திகளை போடலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X