இந்தியாவுக்கு எதிராக சீனா தீர்மானம்: ஜெர்மனி, அமெரிக்கா தடை

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
ஐக்கிய நாடுகள் : பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் சபையில் சீனா கொண்டு வந்த தீர்மானத்திற்கு, ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்காவும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.கடந்த ஜூன் 29 ல், பாகிஸ்தானின் கராச்சி நகரின் சந்திரகர் சாலையில் பாகிஸ்தானின் பங்குச்சந்தைக்குள் நுழைய முயன்ற
கராச்சி, இந்தியா, பாகிஸ்தான், பங்குச்சந்தை, ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, தீர்மானம், ஐக்கிய நாடுகள், Germany, US, china, India-China crisis, anti-India, UNSC, border dispute, பயங்கரவாதிகள், கண்டன தீர்மானம்,தடை

ஐக்கிய நாடுகள் : பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் சபையில் சீனா கொண்டு வந்த தீர்மானத்திற்கு, ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்காவும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

கடந்த ஜூன் 29 ல், பாகிஸ்தானின் கராச்சி நகரின் சந்திரகர் சாலையில் பாகிஸ்தானின் பங்குச்சந்தைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பயங்கரவாதிகள் மற்றும் போலீசார், பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெளியுறவு அமைச்சர் மெக்மூத் குரோஷி ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்தியாவின் ஸ்லீப்பர் செல்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக மெக்மூத் குரோஷி தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.


latest tamil newsஇந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் சீனா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அதில், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள், உதவி செய்தவர்கள், ஆதரவு அளித்தவர்களை இந்த சபையின் உறுப்பு நாடுகள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சர்வதேச சட்டப்படியும், ஐ.நா., தீர்மானத்தின்படியும், அனைவரும் பாகிஸ்தான் அரசு மற்றும் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுடன் , தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனமும் இரங்கலும் தெரிவித்திருந்தது.

இந்த தீர்மானத்தை நேற்று முன்தினம் சீனா கொண்டு வந்தது. இதனை நியூயார்க் நேரப்படி மாலை மணி வரை காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், இந்த தீர்மானம் நிறைவேறிவிடும். ஆனால்,திடீர் திருப்பமாக மாலை 4 மணிக்கு, இந்ததீர்மானத்திற்கு ஜெர்மனி தடை போட்டது.
இது தொடர்பாக தூதரக அதிகாரிகள் கூறுகையில், தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவை , குறைகூறும் பாகிஸ்தான் செயல் ஏற்று கொள்ள முடியாது எனக்கூறி தடை போட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீன தரப்பு, காலக்கெடுவை தாண்டி ஜெர்மனி தலையிட்டதாக குற்றம்சாட்டினர். இதனால், காலக்கெடுவானது ஜூலை 1 காலை 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனால், இந்த தீர்மானத்தை நிறைவேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சீனாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கடைசி நேரத்தில் அமெரிக்காவும் அந்த தீர்மானத்திற்கு தடை போட்டுள்ளது. இதனை கண்டு, சீனாவும், பாகிஸ்தானும் ஏமாற்றமடைந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gandhi - Chennai,இந்தியா
08-ஜூலை-202013:39:10 IST Report Abuse
Gandhi பாகிஸ்தானின் ஏவல் நாய் - தாவுத் இப்ராஹிம் (இந்திய துரோகி) மூலம் 1993- இல் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது 13 இடங்களில் . அதில் பம்பாய் பங்குச்சந்தையும் இருப்பதால் , கராச்சி பங்குச்சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவின் பதிலடி என்று நினைப்பதா. இந்தியாவின் பதிலடி எப்போதும் நேரடியாக வீரமனதாகவும் இருக்கும். 1.Fisherman's Colony in Mahim causeway 2.Zaveri Bazaar Fort 3.Plaza Cinema Dadar 4.Century Bazaar 5.Katha Bazaar 6.Hotel Sea Rock 7.Terminal at Sahar Airport (now Chhatrapati Shivaji International Airport [CSIA] 8.Air India Building[ 9.Hotel Juhu Centaur 10.Worli[25] 11.Bombay Stock Exchange Building Fort 12.Passport Office 13 Masjid-Mandvi Corporation Bank .
Rate this:
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
08-ஜூலை-202013:31:50 IST Report Abuse
Mano முதலில் மும்பை தாக்குதல் குற்றவாளிகளை ஐ. நா. முன் நிறுத்தட்டும்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
04-ஜூலை-202015:53:24 IST Report Abuse
Rasheel கம்யூனிச கொள்கை அப்பாவி மக்களை கொலை செய்து ஆட்சியை நிலை நிறுத்தி கொள்வது. பயங்கரவாத அரசாங்கத்தை ஆதரித்து தனது நாட்டில் பயங்கரவாத செயல்களை செய்வது - உதாரணம் கம்போடியா, சீன, ரஷ்யா இப்பொது நடக்கும் ஹாங்காங். இதை வியாதிகளின் மூலம் அல்லது படை எடுப்புகளின் மூலம் நிறைவேற்றுபவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X