பொது செய்தி

இந்தியா

கொரோனா மையமாக மாறும் காமன்வெல்த் விளையாட்டு அரங்கம்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Delhi, Commonwealth Games Stadium, Covid Centre, Coronavirus, Corona, Covid-19, டில்லி, காமன்வெல்த், விளையாட்டு அரங்கம், கொரோனா, மையம்

புதுடில்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டில்லியில் ஏற்கனவே 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய மருத்துவமனை தயாராகி வரும் நிலையில் காமன்வெல்த் விளையாட்டு அரங்கை 600 படுக்கைகள் கொண்ட கொரோனா மையமாக மாற்றியுள்ளனர்.

டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதில் 58,348 பேர் குணமடைந்துள்ளனர். 30 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,742 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிரா, தமிழகத்திற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களில் டில்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. பெருகி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய உள்துறை அமைச்சக சார்பில் சர்தார்பூரில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனை மற்றும் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 2 ஆயிரம் படுக்கைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.


latest tamil news


இன்னும் 5 ஆயிரம் படுக்கைகளை சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக காமென்வெல்த் விளையாட்டு அரங்கை 600 படுக்கைகள் கொண்ட கொரோனா மையமாக டில்லி அரசு மாற்றியுள்ளது. சில நாட்களில் இந்த மையம் செயல்பட தொடங்கும். இங்கு 80 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்கள் நோயாளிகளை கவனிப்பார்கள். இங்கு மிதமான பாதிப்பு உள்ள நோயாளிகள் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு கடுமையான அறிகுறி ஏற்பட்டால், ஆக்ஸிஜன் வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


latest tamil news


இங்கு ஆண் மற்றும் பெண் வார்டுகள் தனித்தனியாக உள்ளன, இரண்டிலும் தலா 300 படுக்கைகள் இருக்கும். தங்குமிடம் தேவைப்படக்கூடிய சுகாதாரப் பணியாளர்களுக்கும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர 40 ஹோட்டல்களையும், 80 திருமண மண்டபங்களையும் கொரோனா மையமாக மாற்றும் முயற்சியில் டில்லி அரசு ஈடுபட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202000:24:18 IST Report Abuse
தல புராணம் இப்படி ஆயிரம் நோயாளிகளை மூடி வெச்சா நிச்சயம் இந்த மையம், மையப்புள்ளியாக மாறிடும்.. உள்ளே போனா கொரோனா நிச்சயம் என்று ஆகிவிடும். சுகாதாரமாக இருக்க நல்ல காற்றோட்டமும், (தண்ணீர் வசதியுடன்) சுத்தமான கழிவறை வசதியும் செய்து தருவார்கள் என்று நம்பணும்.. டில்லியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரிச்சி ஆடுது..
Rate this:
Cancel
02-ஜூலை-202019:22:55 IST Report Abuse
ஆப்பு காங்கிரஸ் சதியில் கட்டின மைதானமாச்சே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X