பொது செய்தி

இந்தியா

கப்பலில் இடமிருந்தும் 63 மீனவர்களை புறக்கணிப்பு; ஈரானிலிருந்து வந்தவர்கள் யார்?

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால், 745 இந்திய மீனவர்கள் ஈரானில் சிக்கித் தவித்தனர். ஊரடங்கால் மீன் பிடிக்கச் செல்ல முடியாமலும், அரபி முதலாளிகள் உதவாததாலும் தேவையான உணவு, தண்ணீர் கிடைக்காமல் படகிலேயே வசித்தனர். இவர்களை மீட்க வேண்டும் என, பல்வேறு மீனவ அமைப்புகள் இந்திய அரசிற்கு கோரிக்கைகள் விடுத்தன. மீனவர்களை தாயகம் அழைத்துவர தனிக் கப்பலை ஈரானுக்கு அனுப்பியது, மத்திய அரசு.latest tamil news
ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கப்பலில் தமிழகம் செல்வதற்காக முன்பதிவு செய்த அனைத்து மீனவர்களின் விசாக்களையும் கேன்சல் செய்தனர். பாஸ்போர்ட்டில் எக்சிஸ்ட் அடித்து, அவரவர்களது அரேபிய முதலாளியிடம் இருந்து கிளியரன்ஸ் பெற அறிவுறுத்தினர். கிளியரன்ஸ் பெற்றவர்களை கடந்த மாதம் 24ம் தேதி, பந்தர் அப்பாஸ் கப்பல் துறைமுகத்திற்கு செல்ல அறிவுறுத்தினர். அந்தக் கப்பலில் பயணிக்க தயாராக வந்த, 43 தமிழக மீனவர்கள், 20 கேரள மீனவர்கள் உட்பட, 63 மீனவர்களைக் கப்பலில் ஏற அனுமதிக்கவில்லை. 'கப்பலில் போதிய இடவசதி இல்லை' என, இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.எப்படியும் தங்களை கப்பலில் பயணிக்க அனுமதிப்பார்கள் என நினைத்து, துறைமுகத்திலேயே மூன்று நாள்கள் இருந்துள்ளனர். ஆனால், இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், 63 பேரும் தங்கள் இருப்பிடத்திற்கே சென்றுள்ளனர்.


latest tamil news
ஈரானில் இருந்து கப்பலில் குமரி மாவட்டம் வந்த மீனவர்கள் கூறுகையில், 'நாங்கள் பயணித்த கப்பலில், 687 பயணிகள் இருந்தோம். அதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும், 535 பேர். இதில் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் தவிர கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் அல்லாத சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். நாங்கள் பயணித்த கப்பலில் மேலும் 90 பெட்டுகள் காலியாகத்தான் இருந்தன. ஆனால் ஏன் அந்த 63 மீனவர்களைக் கப்பலில் பயணிக்க அனுமதிக்கவில்லை எனத் தெரியவில்லை' என்றார்.

இந்தச் சர்ச்சையால், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில், ''ஈரானில் 63 மீனவர்களை விட்டுவிட்டு மீனவர் அல்லாதவர்களைக் கப்பலில் அழைத்து வந்துள்ளனர். எனவே, கப்பலில் பயணித்தவர்களின் முழு விபரங்களை மீன்வளத்துறையிடம் கேட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
03-ஜூலை-202005:12:57 IST Report Abuse
மலரின் மகள் உணவு கிடைக்காமல் தவித்தனர் என்பதும், அரபி முதலாளிகள் உதவவில்லை என்பதும் உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதுவும் அனைத்து மீனவர்களுக்கும் அப்படியே இருந்தது என்பது தவறாகவே இருக்கும் என தாராளமாக நம்பலாம். பொதுவாகவே அரேபிய முதலாளிகள் என்று அவர்களை பற்றிய மிகவும் தவறாகவே சித்தரிக்கிறார்கள். மிக சிலரே வேண்டுமானால் மோசமாக இருக்கலாம். பெரும்பாலானோர் அப்படி இல்லை. குடும்பத்தில் ஒருவராகவே கூட கருதி அனைத்து வசதிகளையும் செய்வர் அரேபிய முதலாளிகள். உழைபபவர்களுக்கும் அவர்களுக்காக வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கும் நிறையவே செய்வார்கள். மேலும் ரமடான் புனித மாதத்தில் அவர்களுக்கு உணவு கிடைக்க வில்லை என்பது உண்மைக்கு புறம்பாகத்தான் இருக்கும். அந்த மாதம் முழுவதும் நிறைய ஈகை இருக்கும். புண்ணியம் கிடைக்கும் என்பதற்காகவும். ஏழைகளுக்கு உதவுவது கட்டாயமாக்க பட்டிருக்கிறது என்பதற்காகவும் தாராளாமாவே உதவி செய்வர். தானங்கள் இந்த ஒரு மாதத்தில் கிடைப்பது அவர்களின் சில மாத ஊதியத்திற்கு ஈடாகவும் பல நேரங்களில் அதை விட கூடுதலாகவும் இருக்கும். கூலி தொழிலாளிகள் அனைவரும் இந்த மாதத்தில் அரேபிய தேசத்தை விட்டு தாயகம் திரும்ப விரும்பமாட்டார்கள் அத்துணை பண உதவியை பெற்றுவிடுவார்கள், எல்லாம் தான தர்மங்களாகத்தான்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202001:15:11 IST Report Abuse
தல புராணம் நாங்கள் பயணித்த கப்பலில் மேலும் 90 பெட்டுகள் காலியாகத்தான் இருந்தன. ஆனால் ஏன் அந்த 63 மீனவர்களைக் கப்பலில் பயணிக்க அனுமதிக்கவில்லை எனத் தெரியவில்லை' என்றார் - ஏன்னா அவங்க - 43 தமிழக மீனவர்கள், 20 கேரள மீனவர்கள்
Rate this:
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூலை-202020:07:15 IST Report Abuse
sekar ng கப்பலில் கரப்சனா. ஊழல் கப்பலதிகாரிகளிடம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X