பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை: விஜயபாஸ்கர்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Chennai, Corona, Vijayabaskar, சென்னை, மருத்துவமனை, கொரோனா, அமைச்சர், விஜயபாஸ்கர்

சென்னை: சென்னையில் சிடி ஸ்கேன், மொபைல் எக்ஸ்ரே உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 52,926 லிருந்து 56,021 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லாமல் 56,021 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



மாநில நிதியில் இருந்து 93 சதவீதம் நிதியை பரிசோதனை கிட்களை வாங்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். முதியவர்கள், கேன்சர் நோயாளிகள், இதய நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பது சவாலாக உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12,35,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அறிகுறி உள்ளவர்கள், இல்லாதவர்களுக்கு ஒரே மாதிரியாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. அதிக பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.


latest tamil news



நாட்டிலேயே முதன்முறையாக சிடி ஸ்கேன், மொபைல் எக்ஸ்ரே உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சமூக பரவல் இல்லை. ஐசிஎம்ஆர் மட்டுமே சமூக பரவல் குறித்து தெரிவிக்க வேண்டும். அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் மாஸ்க் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் ஆலோசனை வழங்கியிருந்தார்.

தமிழகத்தில் இதுவரை குடிசை பகுதி மக்களுக்காக 46 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்களப் பணியாளர்களுக்கு இரும்பு சத்து மாத்திரை, ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கொரோனா பாசிட்டிவ் வந்தாலும் பதற்றப்படாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202001:18:42 IST Report Abuse
தல புராணம் எய்ம்ஸ் மருத்துவமனையா அமைச்சர் அவர்களே ?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202001:17:38 IST Report Abuse
தல புராணம் பாத்ரூமில் தண்ணி வசதியுடன் இருப்பதை நவீன வசதின்னு சொல்றாரா? இல்லை பாத்ரூம் இருந்தாலே நவீன வசதியா ? அமைச்சர் விளக்குவாரா? நன் செய்தியை விளக்குவாரான்னு கேட்டேன்.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
02-ஜூலை-202019:26:05 IST Report Abuse
Vivekanandan Mahalingam இந்த ஆஸ்பத்திரி எங்கேன்னு சொல்லாம ?
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-ஜூலை-202023:00:59 IST Report Abuse
தமிழ்வேல் கோபாலபுரமா 🤔...
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202007:31:43 IST Report Abuse
தல புராணம்AIIMS Madurai Hospital .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X