பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கிய கொரோனா; ஒரே நாளில் 4,343 பேர் பாதிப்பு

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 02) புதிதாக 4,343 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,343 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,270 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 73 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 33,488 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 12 லட்சத்து 35 ஆயிரத்து 692 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,551 பேர் ஆண்கள், 1,792 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 60,395 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 37,975 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் 91 ஆய்வகங்கள் (அரசு-48 மற்றும் தனியார் 43) உள்ளன. இன்று மட்டும் 3,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 021 ஆக உள்ளது.


latest tamil news
வயது வாரியாக பாதிப்பு


12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 4,836 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 81 ஆயிரத்து 745 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11 ஆயிரத்து 811 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதித்த 57 பேர் உயிரிழந்தனர். அதில், 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,321 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
03-ஜூலை-202014:02:49 IST Report Abuse
ராம.ராசு புள்ளி விபரங்கள் மக்கள் மனதில் புளியைக் கரைக்கின்றது. ஊடகங்கள் அனைத்திலும் இதையே அதிகமாகச் சொல்லுவதால் மக்களின் இயல்பான நிலையில் இருக்கமுடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள், மக்கள் அனைவரும் முக கவசம் இல்லாமல் வெளியே வருவதே இல்லை. என்றாலும் ஒவ்வொரு நாளும் வைரஸ் தோற்றும் புதிய உச்சத்தைத் தொடுவாதாக புள்ளி விபரங்கள் உயர்ந்துகொண்டே போகிறது. எப்படி ஊரடங்கும், முக கவசமும் தீர்வல்ல என்று உலக சுகாதார அமைப்பு சொல்லுவதாக செய்தி ஒருபுறம். ஆனால் அரசு அதைக் கட்டாயமாகச் சொல்லுகிறது. அலோபதியில் மருந்து மாத்திரைகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவச் சிகிச்சையில் குனமடைந்துவிட்டதாக ஒரு புள்ளிவிபரம். எப்படி அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களில், சித்த மருத்துவத்தை எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் முற்றிலுமாக குனமடைந்து விட்டதாகச் சொன்னாலும், சித்த மருத்துவம் ஏன் முழுமையாக செய்தியாக்கப்படவில்லை என்ற கேள்வி எழவே செய்கிறது. அதே போல ஹோமியோபதி மருத்துவத்திலும் எளிதாகக் குணப்படுத்தமுடியும் என்றும் சொல்லப்படுகிறது. சோதனைக் கருவிகளைக் கொண்டு அனைவருக்கும் சோதனை செய்வதை விட, தடுப்பு ஊசி என்பதை தவிர்த்து, சித்த, ஹோமியோ மருந்துகளை மக்கள் அனைவர்க்கும் கொடுத்தால் மிக எளிதாக இந்த வைரஸை இல்லாமல் செய்திவிடலாமே கையில் வெண்ணெய் தாயாராக இருக்கிறது. ஆனால் நெய்க்காக அலையாய் அலைந்து கொண்டு இருக்கிறோமோ என்றுதான் தோன்றுகிறது. வாழ்க்கையே நிச்சயமற்றதாக இருக்கும்போது இப்படி வைரசுக்காக பயந்து பயந்து வாழுவது... இப்படியான ஒரு புள்ளி விபரமும் சொல்லுகிறது "ஒரு நாளைக்கு இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை சராசரியாக 49,500 பேர்கள். இறப்பவர்கள் 14,500 பேர்கள். பிப்ரவரி 15தேதி முதல் ஜூலை 02வரை, 139 நாட்களில் கொரொனோ பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 18,089 பேர்கள். இதே காலக் கட்டத்தில், மொத்த இறப்பு என்பது 20,15,500 பேர்கள். ( 14,500 x 139 ) அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு, கிட்டத்தட்ட 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 130 பேர்கள் மட்டுமே. மீதமுள்ள 20,15,370 பேர்கள் மற்ற பாதிப்புகளால் இறந்தவர்கள்." என்ன சொல்ல....
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
02-ஜூலை-202022:51:24 IST Report Abuse
mohankumar மக்களிடம் ஒரு ஒழுக்கம் இல்லை பயம் இல்லை . தேச பற்று இல்லை . ஹெல்மெட் போடு என்றால் ஏன் போடணும் அப்படித்தான் போட மாட்டேன் என்று சட்டத்தை மீறுவார்கள் . ஊரடங்கு உத்தரவை மீரா கூடாது என்றால் அப்படித்தான் மீறுவோம் . கொரோனாவில் இருந்த பாத்து காத்து கொள்ள வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்றால் அப்படிதான் வருவோம் என்ன பண்ணுவீர்கள் . என்று எல்லா அரசு விதிகளை மதிக்காமல் இஷ்டத்திற்கு நடந்து கொண்டதன் விளைவு தமிழகம் பம்பாயை மிஞ்சி விடும் போல உள்ளது . ஆரம்பத்தில் போலீஸ் நல்ல கேடு பிடி செய்தார்கள் . அரசியல் குறுக்கீடு ரவுடிகளின் அட்டகாசம் காவல்துறையினர் மீதே கையை வைத்தல் போலீஸ் இவர்களின் காலில் விழுதல் கடைசியில் கோர்ட் காவல் துறையை கண்டனம் தெரிவிக்க எப்படியோ போங்கடா எனக்கென என்று காவல் துறை பின்னர் தங்களுடைய கடுமையை அப்படியே விட்டு விட்டது . அன்றைக்கு ஆரம்ப கட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் அகங்காரத்துடன் வெளியே தெரிந்தவர்கள் இப்போது ஆச்பிடல் போகிறார்கள் . இப்போதும் சோசியல் இடைவெளி விடுவதில்லை நாம் ஒதுங்கி நின்றாலும் . நம்மை இடித்து தள்ளி விட்டு செல்கிறார்கள் அரசை குற்றம் கூற யாருக்கும் யோக்கியதை இல்லை . அரசு எல்லா நடவடிக்காய்களையும் எடுத்தது . மக்கள் படு மோசம் .
Rate this:
ராம.ராசு - கரூர்,இந்தியா
03-ஜூலை-202019:15:39 IST Report Abuse
ராம.ராசு மக்களை குற்றவாளிகளாக்குவது மிக எளிது. ஏனென்றால், ஊருக்கு இளைத்தவர்கள் அவர்கள் மட்டுமே. மக்களாட்சி நாட்டில் அரசு மக்களுக்காக இருக்க வேண்டுமே தவிர, அரசுக்காக மக்கள் என்பதாக இருக்கக் கூடாது. ஒழுக்கமும் தேசப்பற்றும் மக்களுக்கு இல்லை எப்படி எளிதாகச் சொல்ல முடிகிறது நண்பரே. சட்டம் மக்களுக்கானதாக இருக்கவேண்டும் நண்பரே. மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்காக சட்டங்களை பயன்படுத்துக் கூடாது. வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணிவது மிகுந்த பாதுகாப்பானதுதான் என்பதை மறுக்க முடியாது. தலைக்கு கவசம் போடாமல் சிலர் போவதும் உண்மைதான். அப்படித்தான் போட மாட்டேன் என்று யாரும் சொல்லுவது இல்லை. அதில் இருக்கின்ற சில அசவ்கரியம்தான் போடாமல் இருப்பதற்கான காரணமே தவிர சட்டத்தை மீறவேண்டும் என்ற நோக்கில் அல்ல. உண்மையில் பெரும்பாலான காவலர்கள் இரு சக்கரத்தில் செல்லும்போது தலைக்கு கவசம் அணிவது இல்லை என்பதுதான் எதார்த்தம். அவரவருக்கு அவர்கள் உயிர் மீது இருக்கின்ற ஆசையை விட காவலர்களுக்கு இருக்கிறது என்பது வெறும் நம்பிக்கை. அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கலாம். ஆனால் கொலை, கொள்ளை செய்தது போல, வயது வித்தியாசம் இல்லாமல் கடும் வார்த்தைகளால் திட்டுவது, அடிப்பது என்பதெல்லாம் சட்டத்தை மீறியது என்பதை உங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்வது இல்லை. முதலில் சட்டத்தை மக்களுக்கு புரிய வைத்து இருக்கவேண்டும். அப்படி சட்டத்தை மீறியவர்கள் மீது தாராளமாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கட்டும் தவறு இல்லை. விருப்படியான நடவடிக்கைதானே இருக்கிறது. அதுவும் சாமானியர்கள் மீது மட்டும்தானே கடுமையான நடவடிக்கையாக இருக்கிறது. அரசியல், அதிகார பலம் இருந்தால் கண்டும் காணாமல் இருக்கும் நிலை இருக்கிறதா இல்லையா என்பது உங்களின் மனசாட்சிக்கே....
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
02-ஜூலை-202019:56:19 IST Report Abuse
ocean kadappa india குரோனா தொற்றாதவர் எவருமில்லை. மூக்கில் துணி கட்டினாலும் தனி மனித இடைவெளியில் நடமாடினாலும் கைகளை சுத்தமாக கழுவினாலும் கிருமி நாசினிகளை கைகளில் அடித்துக்கொண்டாலும் எத்தனை ஊரடங்கை போட்டாலும் குரோனா தொற்றுதல் தொடர்ந்து கொண்டஇருக்கிறது. இதில் ஜி4 பன்றி வைரஸ் வேறு வர உள்ளதாக கூறப்படுகிறது.இனி பொது மக்கள் அவரவர் உயிரை அவரவர்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அடுத்தவரை கெடுத்து வாழும் கூட்டம் உலகில் பெருகி விட்டது. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X