பொது செய்தி

இந்தியா

பெங்களூருவில் சிகிச்சைக்கு மறுப்பு; கொரோனா நோயாளி உயிரிழப்பு!

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த 52 வயது நபர், 18 மருத்துவமனைகளால் சிகிச்சை மறுக்கப்பட்ட பின், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news



பெங்களூருவைச் சேர்ந்த 52 வயதாகும் பவர்லால் சுஜானி என்பவருக்கு, தொடர்ந்து வாந்தி மற்றும் சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பவர்லாலை, அவரது சகோதரன் தினேஷ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் எந்த வொரு மருத்துவமனையிலும் அவருக்கு சிக்கிச்சையளிக்க வில்லை. இந்நிலையில் பவர்லால் உயிரிழந்துள்ளார்.


latest tamil news




18 மருத்துவமனைகள் மறுப்பு


இதுகுறித்து, தினேஷ் தெரிவித்துள்ளதாவது:
பவர்லாலுக்கு, தொடர்ந்து வாந்தி மற்றும் சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எந்த வாகனமும் கிடைக்காததால், இருசக்கிர வாகனத்தில் உட்கார வைத்து, வீட்டிலிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள, ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவரை உள்ளே அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்த பின், ஒரு பேப்பரில் ஆங்கிலத்தில் ஏதோ எழுதிவிட்டு, 'இவரை இங்கிருந்து அழைத்து சென்றுவிடுங்கள்' என்றார்கள்.
அங்கு அருகாமையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கும் சிகிச்சையளிக்க மறுத்தனர். அங்கிருந்து ஒரு ஆம்புலன்சில் பவர்லாலை அழைத்துக்கொண்டு 16க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றேன். எங்களை வாசலிலேயே திருப்பி அனுப்பினர். அவர் எந்தவொரு சிகிச்சையும் கிடைக்காமல் என் கண் முன் உயிரிழந்தார். இறந்தபின், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் பாசிட்டிவ் வந்துள்ளது. அதனால், என்னையும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், என் சகோதரன் உயிருடன் இருக்கையில் சிகிச்சையளிக்க மருத்துவிட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



கொரோனா தொற்றின் லேசான அறிகுறியோ அல்லது தீவிர அறிகுறியான மூச்சு திணறலோ இருந்தால், இம்மாதிரி மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்படும் முதல் நபர் இவர் இல்லை. ஊரடங்கு ஆரம்பம் ஆனது முதலே, டில்லி, மும்பை, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மக்களுக்கு சிகிச்சை மறுக்கப்படுவது குறித்த செய்திகள் வரத்துவங்கிவிட்டன.


9 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்


'மருத்துவமனைகளில் இருந்த அனைத்து கொரோனா வார்டும் நிறைந்துவிட்டன. ஒருவேளை அவரின் கொரோனா பரிசோதனை முடிவு எதிர்மறையாக வரும்பட்சத்தில் அவரை அந்த வார்டில் சேர்ப்பது சரியானதாக இருக்காது' என, கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இருந்தும், இந்தச் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள கர்நாடக அரசு, ஒன்பது மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202001:24:42 IST Report Abuse
தல புராணம் எந்தவொரு சிகிச்சையும் கிடைக்காமல் என் கண் முன் உயிரிழந்தார். இறந்தபின், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். - கண்கெட்ட பின்னர் சூரியநமஸ்காரம்.. டிரீட்மென்ட் பாக்காம, பரிசோதனைக்கு ரூ. 5000 என்று பில்லும் கையில் கொடுத்திருப்பார்கள்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202001:20:35 IST Report Abuse
தல புராணம் //எந்தவொரு சிகிச்சையும் கிடைக்காமல் என் கண் முன் உயிரிழந்தார். இறந்தபின், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். // இன்கிரடிபில் இந்தியா..
Rate this:
Cancel
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
02-ஜூலை-202022:20:41 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி பரப்பி விட்டு நன்றாக வேடிக்கை பார்க்கும் தப்பிலிக்கு கும்பலுக்கு இப்போ குஷியாகத்தான் இருக்கும்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202006:50:07 IST Report Abuse
தல புராணம்இப்படியே சொல்லிக்கிட்டு ஒண்ணும் பண்ணாமே அடுத்தவன் மேலே வீண்பழியை போட்டுட்டு குத்துவிளக்கை காட்டிட்டு சங்கு ஊதுறது தான் சங்கிகளின் கையில் இருக்கும் திட்டம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X