20 கோடி வாடிக்கையாளர்களை இழந்த டிக்டாக்: ரூ 45,000 கோடி நஷ்டம்| Chinese company ByteDance set to suffer Rs 45000 crore loss due to ban on TikTok | Dinamalar

பொது செய்தி

இந்தியா

20 கோடி வாடிக்கையாளர்களை இழந்த டிக்டாக்: ரூ 45,000 கோடி நஷ்டம்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (19)
Share

புதுடில்லி: சமீபத்தில் லடாக் எல்லையில் சீனா நடத்திய அடவாடித்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த நம் வீரர்களில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 42 பேர் வரை கொல்லப்பட்டனர். இதனால் நாடெங்கிலும் சீனாவுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தனர்latest tamil newsஇதையடுத்து மத்திய அரசு டிக்டாக், ஷே ர்சாட் உள்ளிட்ட 59 சீனசெயலிகளுக்கு தடை விதித்தது. இந்த நடவடிக்கையால் டிக்டாக் இந்தியாவில் மட்டும் 20 கோடி வாடிக்கையாளர்களை இழந்தது. இதனால் டிக்டாக் தாய் நிறுவனமான 'பைட் டான்ஸ்'க்கு ரூ 45,000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது

இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், ' கடந்த மாதம் நடந்த இந்திய சீன எல்லைப் பிரச்னையால் சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த நடவடிக்கையால் டிக்டாக் தய் நிறுவனமான பைட் டான்ஸ் ரூ 45,000 கோடி வரை நஷ்டத்தை சந்திக்கும்' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் மட்டுமில்லாமல் தடை செய்யப்பட்ட செயலிகளின் தாய் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு இழப்பை சந்தித்துள்ளது. கடந்த சில வருடங்களாக பைட்டான்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ 7,500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்தது. பைட் டான்ஸ் நிறுவனத்தின் சிறிய அளவிலான வீடியோக்களை டிக்டாக் பகிர்கிறது. இதே நிறுவனம் சமூக வலைதளம் போல் செயல்படும் ஹலோ செயலியை இந்திய சந்தையை குறி வைத்து அறிமுகம் செய்தது. விகோ வீடியோ எடிட்டிங் செயலியும் இந்நிறுவனத்தின் செயலி தான்.


latest tamil newsமொபைல் செயலி பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவரின் தரவுப்படி கடந்த மே மாதத்தில் மட்டும் உலக அளவில் டிக்டாக் 12 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக்கின் பங்கு 20 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவைப் போல் இரு மடங்காகும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X