பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., மருத்துவமனை பணியாளர்களுக்கு கொரோனா; கோவையில் பாதிப்பு 600ஐ கடந்தது

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை: கோவையில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் உட்பட இன்று ஒரே நாளில், 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 600ஐ கடந்துள்ளது.



latest tamil news




கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பணியாற்றி வரும் மூன்று ஆண்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், ஒருவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், பீளமேடு, ஸ்ரீ நகரை சேர்ந்த 21 வயது ஆண், தெலுங்கு பாளையம் தனியார் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் 25, 35 வயது ஆண், இடிகரையை சேர்ந்த 50 வயது பெண், சிங்காநல்லுார் கோத்தகிரி கார்டனை சேர்ந்த 23 வயது ஆண், பி.என்.புதுாரை சேர்ந்த, 73 வயது மூதாட்டி, செல்வபுரம் சரோஜினி நகரை சேர்ந்த 21 வயது பெண், ஜோதிபுரத்தை சேர்ந்த 40 வயது ஆண், கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 45 வயது நபர் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 608 ஆக உயர்ந்துள்ளது.
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் நீலகிரியை சேர்ந்த 67 முதியவர், கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


latest tamil news




இதுவரை 572 பேர் டிஸ்சார்ஜ்!


கோவை இ.எஸ்.ஐ, மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''இ.எஸ்.ஐ, மருத்துவமனையில், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 37 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இங்கு, கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை மொத்தம் 572 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்சமயம், 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
03-ஜூலை-202004:38:15 IST Report Abuse
Kundalakesi தெலுங்குபாளையம் ல மூணு பெரிய அபராட்மெண்ட்ஸ் இருக்கு. சில ஆயிரம் பேர் இருகாங்க. அவங்க தினமும் வெளியே சென்று வருவது இந்த அரசிற்கு தெரியுமா? சமூக பரவல் கூடும். தயவு செய்து தடை செய்து கடுமையான நடவடிக்கை எடுங்கள். வெளியே சென்று வருவதற்கே பயமாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X