பொது செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டை: சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி: முதல்வர்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

சென்னை: புதுக்கோட்டை அருகே கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவை சேர்ந்த ஏம்பல் கிராமத்தை சேர்ந்த7 வயது சிறுமி கடந்த மாதம் 30ம் தேதி முதல் காணாமல் போனார். நேற்று அவர் வண்ணாங்குளம் என்ற ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.


latest tamil news



கொடூர செயலுக்கு காரணமானகுற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பலியான சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு அவருடைய குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார் .
இதற்கிடையே சிறுமியின் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்பு சட்ட சீர் உதவி தொகையான ரூ. 8.25 லட்சம் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
03-ஜூலை-202006:18:03 IST Report Abuse
natarajan s சிறுமி கொலைக்கு காரணமானவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும். இது ஒரு தவறான முன் உதாரணம் ஆகிவிடும். எங்காவது தவறு நடந்தால் அரசு பண உதவி கிடைக்கும் என்ற எண்ணம் பல குற்ற செயல்கள் நடக்க காரணமாகிவிடும். வேண்டும் எனரே இது மாதிரி செய்து நிவாரணம் பெற ஒரு கூட்டம் கிளம்பி விடும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202001:05:06 IST Report Abuse
தல புராணம் JusticeforJayapriya // பக்கத்து வீட்டைச் சேர்ந்த "ராஜேஷ்" என்ற நபரை போலீசார் கைது விசாரித்தனர்// இந்த விவரமெல்லாம் காணாமே.. அவரு லோக்கல் பாஜக நிர்வாகியா?..
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூலை-202022:34:54 IST Report Abuse
padma rajan என்னதான் நடக்கிறது தமிழகத்தில். விசாரணைக் கைதிகள் மரணம், சிறுமி கற்பழிப்பு கொலை, நெய்வேலியில் விபத்து 8 பேர் மரணம். மேலும் ஒரு விசாரணைக் கைதி ஆட்டோ டிரைவர் இறந்த சம்பவம் பெரிதுபடுத்தவில்லை என்ன காரணம்? ஊடகங்களும் பத்திரிகைகளும் கூட இதை கண்டு கொள்ளவில்லை.. சாத்தான்குளம்சம்பவம் மட்டுமே தலைப்புச் செய்திகளாக வந்துள்ளன. இந்த வழக்கை அதிவிரைவில் முடித்து ஒரே மாதத்தில் தண்டனை உறுதிப்படுத்த வேண்டும். முதலமைச்சருக்கு இப்போது நெருக்கடியான நேரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X