பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களில் 59.52% பேர் குணமடைந்தனர்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 59.52 சதவீதம் பேர் குணமடைந்ததாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news


கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளை கவலை அடையச் செய்துள்ளது. இந்தியாவில் இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்துள்ளது. பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,800 ஐ கடந்துள்ளது.

சற்று ஆறுதலான விஷயமாக இதுவரை இந்தியாவில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 859 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 881 பேர் குணைமடைந்துள்ளனர்.


latest tamil news


இதுவரை குணைமடைந்தவர்களின் விகிதம் 59.52 சதவீதமாக உள்ளது. மொத்தம் 2,26,947 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அதிக எண்ணிக்கையில் குணமடைந்தோரின் வரிசையில் முதலாவதாக மஹாராஷ்டிரமும், அடுத்தடுத்த இடங்களில், டில்லி மற்றும் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சண்டிகர், மேகாலயா, ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக சதவீதத்தில் மக்கள் குணமடைந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
02-ஜூலை-202020:40:18 IST Report Abuse
Visu Iyer குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் வருமா... (தெரியாமல் தான் கேட்கிறேன்..)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X