சாத்தான்குளம் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஏட்டு கைது

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (17) | |
Advertisement
துாத்துக்குடி : சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் நேற்று கைது செய்யப்பட்டனர்.துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் 60, மகன் பென்னிக்ஸ் 31, ஜூன் 19 இரவு ஊரடங்கு கட்டுப்பாட்டின் படி கடையை அடைக்கவில்லை எனக்கூறி போலீசார் அழைத்துச் சென்றனர். போலீஸ் ஸ்டேஷனில் கடுமையாக
Tuticorin, custodial deaths, police officers, arrested, murder, thoothukudi, father-son deathதுாத்துக்குடி : சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் நேற்று கைது செய்யப்பட்டனர்.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் 60, மகன் பென்னிக்ஸ் 31, ஜூன் 19 இரவு ஊரடங்கு கட்டுப்பாட்டின் படி கடையை அடைக்கவில்லை எனக்கூறி போலீசார் அழைத்துச் சென்றனர். போலீஸ் ஸ்டேஷனில் கடுமையாக தாக்கப்பட்டனர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் 22ம் தேதி அடுத்தடுத்து இறந்தனர்.


latest tamil newsஇந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய ஜெயராஜ் குடும்பத்தினர் வலியுறுத்தினர். தமிழக அரசு சி.பி.ஐ., விசாரிக்க பரிந்துரைத்தது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.நேற்று முன்தினம்
சி.பி.சி.ஐ., டி.,ஐ.ஜி., சங்கர், எஸ்.பி., விஜயகுமார், டி.எஸ்.பி., அனில்குமார் சாத்தான்குளத்தில் முகாமிட்டனர்.

தந்தை, மகன் இறந்த வழக்கு, இரண்டு கொலை வழக்குகளாக மாற்றப்பட்டது. எஸ்.ஐ., ரகுகணேஷ் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டு துாத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் போலீசார் பாதுகாப்பில் இருந்தனர்.நேற்று அதிகாலை மூவரையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். நேற்று பகல் முழுவதும் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மாலையில் மருத்துவ
மனையில் சோதனைக்கு பிறகு துாத்துக்குடி மாஜிஸ்திரேட் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மூவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.
அப்ரூவராகும் ஏட்டு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏட்டு முத்துராஜை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அவரை அப்ரூவராக மாற்ற உள்ளனர். அவரை குளத்துார் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர்.
கொலை தொடர்பாக விசாரணை நடத்தி நான்கு நாட்களில் ஆவணங்களை தாக்கல் செய்வோம் என சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்திருந்தனர். அதன்படி முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ்
நண்பர்கள் குழு, வேறு போலீசாரின் தொடர்பு குறித்து விசாரணை நடக்கிறது. எனவே மேலும் சிலர் கைது செய்யப்படலாம்.


போலீஸ் பாதுகாப்புசாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் சம்பவம் நடந்த ஜூன் 19 இரவு பணியில் இருந்த போலீஸ்காரர் ரேவதி வழக்கில் அளித்த சாட்சியம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை என ரேவதி தெரிவித்தார். அவரது கணவர் சந்தோஷும், தங்களால் இந்த சம்பவத்தில் அறிந்த உண்மையை மறைக்க முடியாது என தெரிவித்திருந்தார். எனவே நீதிமன்ற உத்தரவின்படி சாத்தான்
குளம் அருகே அறிவான்மொழி கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரேவதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டு
உள்ளது.

மாஜிஸ்திரேட் விசாரணை

சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், திருச்செந்துார் அரசு விடுதியில் வழக்கில் தொடர்புடையவர்களிடம் தினமும் விசாரித்து வருகிறார்.
ஏற்கனவே போலீசார் ரேவதி, பியூலா, சாத்தான்குளம் மருத்துவமனை டாக்டர் வினிலாவை விசாரித்துள்ளார். நேற்றும் விசாரணை நடந்தது. சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் 'சிசிடிவி' கம்ப்யூட்டர் பொறுப்பாளராக இருந்த போலீஸ்காரர் தாமஸ் பிரான்சிஸ், இன்ஸ்பெக்டரின் வாகன டிரைவர் ஜெயசேகரிடம் விசாரணை நடத்தினார்.


திருப்பம் ஏற்படுத்திய மூவர்*சாத்தான்குளம் வழக்கு திருப்பத்தை சந்திக்க காரணமாக இருந்தவர் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி. ஆரம்பத்தில் இருந்தே தந்தையும் தம்பியும் அடித்துக்கொல்லப்பட்டார்கள் என்பதில் உறுதியாக இருந்தார். அரசு அறிவித்த நிதி, வேலை தேவையில்லை. இருவர் இறப்பிற்கு நியாயம் வேண்டும். தாக்கியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரையிலும் இருவரது உடல்களையும் பெறமாட்டோம் என கூறியிருந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு எடுத்தபின் நீதித்துறை மீது நம்பிக்கை
வைக்கிறோம் என்று கூறி இருவரது உடல்களையும் பெற்றுச் சென்றார். அவரின் உறுதியே வழக்கின் போக்கை மாற்றியது.

*திருப்பத்தை ஏற்படுத்திய இன்னொருவர் போலீஸ்காரர் ரேவதி. சம்பவம் நடந்த ஜூன் 19 இரவு சாத்தான்குளம் ஸ்டேஷனில் இரவுக்காவல் பணிபுரிந்தவர். அங்கு
தனியறையில் தந்தை, மகன் தாக்கப்பட்டதையும் விடிய விடிய கேட்ட அவர்களின் அலறல் சத்தத்தையும் அவ்வப்போது கணவர் சந்தோஷுக்கு அலைபேசியில் தெரிவித்தார். ரேவதியின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியமாக கருதப்படுகிறது.

*இருவர் இறந்தது குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்தார். ஜெயராஜ் மனைவி செல்வராணி, மகள் பெர்சியிடம் பதிவு செய்த வாக்குமூலங்களின் அடிப்படையில் தொடர் விசாரணை மேற்கொண்டார். ரேவதியின் வாக்குமூலம் அரசுக்கு எதிராக இருப்பினும் நேர்மையாக பதிவு செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு சென்றபோது அங்கு போலீசார் தன்னை அவமரியாதையாக நடத்தியது, போலீஸ்காரர் மகராஜன் அவதுாறாக பேசியதை புகாராக, உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு அனுப்பிவைத்தார். மூவராலும் இந்த வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
03-ஜூலை-202008:51:15 IST Report Abuse
G.Prabakaran நீதி மன்றம் தானே முன் வந்து இந்த வழக்கை சிறிது காலதாமதம் ஆனாலும் வேகமெடுக்க வைத்து விசாரணையை துரிதப்படுத்தி பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பெண் தலைமை காவலர் ரேவதி அவர்கள் தைரியமாக சாட்சியம் அளித்து பெண் தெய்வம் ஆக உயர்ந்து நிற்கிறார்.
Rate this:
Cancel
mohan ramachandran - chennai,இந்தியா
03-ஜூலை-202008:42:54 IST Report Abuse
mohan ramachandran இந்த வழக்கு நேற்று வரை மரண வழக்கு இன்று சாத்தான் குளம் கொலை வழக்காக மாறுகிறது தலைப்பில்
Rate this:
Cancel
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
03-ஜூலை-202007:54:28 IST Report Abuse
G.MUTHIAH சொந்தமா" அதாவது " தனக்குத்தானே சூன்யம் வைத்துக்கொள்வது என்று கிராமத்து மக்கள் சொல்வார்கள அப்படி என்றால் என்ன தெரியுமா வாசகர்களே.....?..?...?....?.....? “மக்கள் வரிப்பணத்தில்” சம்பளம், தினம் படிக்காசு, ஊர் சுற்றும்படிக்காசு ,போட்டுக்கொள்வதற்கு உடைகள்,காலணிகள்,வாகனங்கள் எல்லாம் கொடுத்து அவர்களுக்கு வேலைசெய்ய அலுவலகத்தில் எல்லா வசதியும் கொடுத்து வரி செலுத்தும் மக்களை கொல்கின்றனர், அவர்களிடம் லஞ்சம் வாங்கிஒழுங்கு முறையாக வேலை செய்வதும் இல்லை. வருவாய் துறை , பத்திரப்பதிவுத்துறை நீதித்துறை, காவல்துறை.”அதாவது” எல்லா அரசுத்துறைகளிலும் ஒற்றுமையாக காட்டிக்கொடுக்காமல் எல்லாம் சுதந்திராக நடக்கின்றது. அரசு ஊழியர்கள் இப்படி சுதந்திரமாக இருக்க காந்தி பாடுபட்டார்…….?, மக்களுக்காக இல்லவே இல்லை........???......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X