பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் புதிய உச்சம்; ஒரே நாளில் 6,330 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020
Share
Advertisement

மும்பை: மஹாராஷ்டிராவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 6,330 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 125 பேர் பலியாகினர்.



latest tamil news


நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூலை 2) மட்டும் 6,330 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,86,626 ஆக அதிகரித்தது.


latest tamil news


இன்று மட்டும் 125 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 8,178 ஆக உயர்ந்தது. புதிதாக 8,018 பேர் குணமானதையடுத்து, இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,01,172 ஆக உயர்ந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X