பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம்

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

சென்னை: உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நகரங்களில் லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு அடுத்தபடியாக சென்னை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜூன் 30ம் தேதி சென்னையில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதே நாளில் டில்லியில் 2,199 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சென்னையில் கடந்த மார்ச் மாதம் 9ல் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச்சில் கொரோனா தொற்று குறைவாக உள்ளது. ஏப்ரலில் சற்று வேகமாக பரவல் ஆரம்பித்தது.latest tamil newsதற்போது சென்னையில் தான் கொரோனா பரவல் அதிக வேகமாக உள்ளது. ஜூன் 30ம் தேதி இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட நகரமாக சென்னை மாறியது. சென்னைக்கு அடுத்தபடியாக டில்லி, தானே, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கவுகாத்தி பால்கர், மற்றும் ராய்காட் நகரங்கள் உள்ளன.

உலகளவில் லாஸ் ஏஞ்சல்ஸ், சென்னை, சாண்டியாகோ, டில்லி, சா பாலோ, தானே, மியாமி, பியூனஸ் அயர்ஸ், சல்வாடர், லிமா ஆகிய நகரங்கள் கொரோனா அதிகம் பரவும் நகரங்களாக உள்ளன.

இந்நிலையில் சென்னையிலும் தமிழகத்திலும் கொரோனா சோதனை எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது ஜூன் மாதம் தமிழகத்தில் சோதனை இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 10 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்ககள் தெரிவிக்கின்றன. சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.


latest tamil newsஇந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா அதிகம் பரவும் நகரமாக மும்பை இருந்தது. ஜூன் மாதத்தில் டில்லி கொரோனா அதிகம் பரவும் நகரமானது. தற்போது சென்னை, டில்லியை முந்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
03-ஜூலை-202012:27:07 IST Report Abuse
Nallavan Nallavan ஏற்கனவே உலக அளவிலான ஊழலில் அலைக்கற்றை ஊழலுக்கு இரண்டாம் இடம் கிடைத்திருந்தது.... தற்பொழுது இது... இனியாவது கைபர் போலன் வழி புகுந்தவர்களின் கோட்டம் அடங்கட்டும்.. தமிழன் புகழை அவர்கள் அறிந்து ஓடட்டும் ...........
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஜூலை-202006:34:55 IST Report Abuse
 Muruga Velvalluvar கோட்டம் dhaan theriyum ......
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
03-ஜூலை-202011:32:56 IST Report Abuse
R. Vidya Sagar எந்த அடிப்படையில் என்று தெரிய வில்லை. எப்படி இருந்தாலும் மெத்தானமான அணுகுமுறைதான் காரணம். இதே விகிதம் மாவட்டங்களிலும் பரவி வருகிறது.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
03-ஜூலை-202012:54:52 IST Report Abuse
s.rajagopalanதவறு .. மக்களின் ஒத்துழையாமையும் ஒரு முக்கிய காரணம். யாருக்கும் ஒரு தீர்வு சொல்ல முடிய விலலயே ? கண்டனம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஸ்டாலினை முதல்வராக நியமித்து பார்க்கலாம்...
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
03-ஜூலை-202008:35:47 IST Report Abuse
Allah Daniel சொம்மவா...ஒன்றினைவோம்னுவானு நம்ம சுடலை போட்ட ஸ்கெட்ச் ஆச்சே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X