நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா?

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா?

காத்மாண்டு: நேபாளத்தில், இந்தியாவுக்கு எதிரான நிலையை எடுத்துள்ள பிரதமர் சர்மா ஒலிக்கு, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், நேற்று அவர் ஜனாதிபதியை சந்தித்தார். இதையடுத்து, எப்போது வேண்டுமானாலும், அவர் பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


சதி

நம் அண்டை நாடான நேபாளம், சமீப காலமாக சீனாவுடன் சேர்ந்து, நமக்கு எதிரான கொள்கையை பின்பற்றி வருகிறது. நம் நாட்டிற்கு சொந்தமான சில பகுதிகளை, தங்கள் வரைபடத்தில் சேர்த்து, தங்களுக்கு சொந்தமானது என விஷம பிரசாரம் செய்து வருகிறது. நேபாள பிரதமர் சர்மா ஒலி, சீனாவுடன் வைத்துள்ள ரகசிய உறவு காரணமாக, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பின்பற்றி வருவதாக, அவரது கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த சர்மா ஒலி, 'கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள், இந்தியாவுடன் கூட்டு வைத்து, என்னை கவிழ்க்க சதி செய்கின்றனர்' என, குற்றம் சாட்டினர். இது, கம்யூனிஸ்ட் தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 'எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டை சர்மா ஒலி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என்றனர். இந்நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டம் சமீபத்தில் காத்மாண்டுவில் நடந்தது. இதில், மொத்தம் உள்ள, 40 உறுப்பினர்களில், 30 பேர், சர்மா ஒலிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.


சலசலப்பு

இதையடுத்து, சர்மா ஒலி, அதிபர் பிந்த்யா தேவி பண்டாரியை, நேற்று முன்தினம் சந்தித்தார். நேற்றும் அதிபரை சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக அமைச்சரவை கூட்டத்தையும் கூட்டி விவாதித்தார். இது, நேபாள அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் பதவியை, சர்மா ஒலி ராஜினாமா செய்யப் போவதாகவும், எந்த நேரத்திலும் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
05-ஜூலை-202014:58:10 IST Report Abuse
unmaitamil மோடி விளையாட்டு ஆரம்பம்.... இனி இந்தியாவுடன் மோத நினைக்கும் யாருக்கும் இந்த நிலைமைதான். அடுத்து இம்ரான்கான். பிறகு திபெத்.
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
05-ஜூலை-202016:21:32 IST Report Abuse
sankarnepal is a only hindu country . pasputhi nathar is very important for indian . No communist cannt play on the same. god is looking on everything...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X