அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் சிக்கியது தமிழக அரசு

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 02, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
சென்னை : 'பல்முனை அழுத்தத்தால், சட்டப் பொறியில் சிக்கி கொண்ட தமிழக அரசு, ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்கு கணக்குக் காட்டி தப்பிவிட நினைக்கக் கூடாது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சாத்தான்குளத்தில், ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோரை கொடூரமாக கொலை செய்தவர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தலையீட்டால், உரிய சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு,
'பல்முனை அழுத்தம், சட்டப் பொறியில் சிக்கியது

சென்னை : 'பல்முனை அழுத்தத்தால், சட்டப் பொறியில் சிக்கி கொண்ட தமிழக அரசு, ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்கு கணக்குக் காட்டி தப்பிவிட நினைக்கக் கூடாது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:சாத்தான்குளத்தில், ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோரை கொடூரமாக கொலை செய்தவர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தலையீட்டால், உரிய சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு, வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன்.இத்தோடு கடமை முடிந்ததாக, தமிழக அரசு தப்பு கணக்கு போடக்கூடாது.இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வையும், மக்களும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வணிகர்களும் கண்காணித்துக் கொண்டே இருப்பர். யாரையும் காப்பாற்ற, தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது.

இரண்டு பேர் கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 'பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்' பிரிவை சேர்ந்த சிலருக்கும், இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது; அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும்.தலைமை காவலர் ரேவதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும்.கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Narayanaswamy - Madurai,இந்தியா
06-ஜூலை-202010:30:51 IST Report Abuse
Subramanian Narayanaswamy இந்த சுடலை, கோபால் ராவ் வை i கொன்றார்கள் பற்றி ஏன் yedhuvum வாய் திறக்கவில்லை?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
05-ஜூலை-202005:51:27 IST Report Abuse
meenakshisundaram சம்பவம் நடந்த உடனேயே இருபத்தி இந்து லக்ஷம் நிவாரணம் சலின் ரிவித்ததன் பின்னணி என்ன?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
10-ஜூலை-202013:58:14 IST Report Abuse
madhavan rajanOnly to show kindness to the poor and down trodden family. The persons killed were known for no income group, very poor a small mobile shop the products worth only about 25 lakhs....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜூலை-202018:10:32 IST Report Abuse
Endrum Indian குழந்தாய் உனது ஆட்சியில் இதை விட கொடூரங்கள் போலீஸ்காரர்களால் நடத்தப்பட்டது???அப்பொழுது என்ன செய்தாய்???"ஓ அதுவா அது இந்துக்களுக்காக இருக்கும் ஆகவே நாங்கள் கண்டு கொள்ளமாட்டோம் இப்போ கிருத்துவர்களுக்கு மைனாரிட்டிகளுக்கு ஒன்று நடந்தால் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் - இப்படிக்கு சுடலை மாயாண்டி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X