அமெரிக்காவில் காந்தி சிலை மீண்டும் திறப்பு

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 02, 2020
Share
Advertisement
 அமெரிக்காவில்  காந்தி சிலை மீண்டும் திறப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.


latest tamil news



தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை கடந்த மாதம் விஷமிகள் சிலர் அவமதிப்பு செய்தனர். தகவலறிந்த தூதரக அதிகாரிகள் சிலை பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்துள்ளனர்.
இந்நிலையில் காந்தி சிலை புனரமைக்கப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித்சிங் மற்றும் இரு நாட்டு தூதரக அதிகாரிகள், அமெரிக்கா வாழ் இந்திய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X