மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

யாங்கன் : மியான்மர், மரகத சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 162 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 54 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.



latest tamil news


அண்டை நாடான மியான்மர், மரகத சுரங்கத் தொழிலில் பெயர் பெற்றது.இங்கு, யாங்கூன்நகரில் இருந்து, 950 கி.மீ., துாரத்தில், ஹபாகந்த் நகரில் மரகத சுரங்கப் பணிகள் நடைபெறுகின்றன. நேற்று, இப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுரங்கப் பணிகளில் ஈடுபட்டிருந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.


latest tamil news


தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், படுகாயம் அடைந்த, 54 பேரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அத்துடன், மண்ணில் புதைந்திருந்த, 50 பேரின் சடலங்கள் முதலில் மீட்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 112 சடலங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து பலி எண்ணைக்கை 162 ஆக அதிகரித்துள்ளதாக மியான்மர் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. சுரங்கப்பணிகளில், 200க்கும் அதிகமானோர் ஈடுபட்டிருந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news


மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது. மலையடிவாரத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெறுவதால், அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதாக, சுற்றுப்புறத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Sanjay - Chennai,இந்தியா
03-ஜூலை-202002:24:45 IST Report Abuse
R Sanjay சரியாக சொல்லவேண்டும் என்றால் "சார்வரி வருஷத்திய ஆற்காடு கா.வெ. சீதாராமய்யர் சர்வமுகூர்த்த பஞ்சாங்கம்"(2020-2021) அதில் சரியாக பதினோராம் பக்கத்தில் "சுரங்கத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது அது தான் இங்கு நடக்கிறது அதே போல வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்த கோதுமை பயிர்களை நாசம் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதியவகை வைரஸ் கிருமி உருவாகும் என்று கூறியிருக்கிறார்கள். இது அனைத்துமே நடந்துவிட்டது. என் பஞ்சாங்கத்தை நினைக்கும்போது உலகில் உள்ள அனைத்து சாஸ்திரங்களில் நம் பஞ்சாங்கம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இனி அடுத்தது வரப்போவதை பார்ப்போம். 1.ஆற்றின் குறுக்கே அண்டை மாநிலம் பல புதிய பாலங்கள் கட்ட நேரும், இருப்பினும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த ஆணை உடைப்பு ஏற்ப்படும். 2.நீண்டகாலமாக இருந்த நதி நீர் திட்டம் இந்த ஆண்டு நிறைவேற்ற நேரும். 3.பூமியில் இருந்து எடுக்கும் பொருட்களின் வரி குறைக்க நேரும். 4.பாகிஸ்தான் வெடுக்குண்டு தாக்குதல் நடத்த நேரும் அதற்க்கு இந்திய தக்க பதிலடி கொடுக்கும். 5. அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் உற்பத்தியாகி தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்க மற்றும் மத்திய கர்நாடகம், கேரளா, மும்பை போன்ற இடங்களின் கடுமையான வெல்ல பேருக்கு ஏற்படும். 6. மணல் ஜெல்லி,சிமெண்ட் கம்பி போன்ற பொருட்களின் விலை திடீரென வீழ்ச்சியடையும். 7.நவம்பர் 2020 மாதம் நதிநீர் திட்டத்தை மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த நேரும். இன்னும் பல போட்டிருக்கு. பிறகு ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன். இது எல்லாம் நடக்கும் சமயத்தில் ஜோதிடத்தை நம்பாதவர்கள்கூட நம்புவார்கள்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
03-ஜூலை-202005:44:05 IST Report Abuse
 Muruga Velபஞ்சாங்கத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு அலையுங்கள் ... இருக்கற கொடுமை போதாதுன்னு புதுசா நீங்க வேற ..அடுத்த வருஷம் GDP எவ்வளவுன்னு போட சொல்லுங்க பஞ்சாங்கத்துல ..ட்ரம்ப் ஜெயிப்பாரா தோப்பாரான்னு போட சொல்லுங்க .....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202000:54:05 IST Report Abuse
தல புராணம் இன்னொரு வடகொரியா போன்ற நாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X