பொது செய்தி

தமிழ்நாடு

புடலங்காய் கிலோ ரூ.10க்கு விற்பனை

Added : ஜூலை 03, 2020
Share
Advertisement
 புடலங்காய் கிலோ ரூ.10க்கு விற்பனை

உடுமலை:உடுமலை பகுதியில், தேவை குறைந்து, புடலங்காய் விலை சரிந்து வருவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பல ஆயிரம் ஏக்கரில், கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.மேலும், விளைநிலங்களில், பந்தல் அமைத்து, பாகற்காய், புடலங்காய், சுரைக்காய் உட்பட சாகுபடிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிலையான விலை, செலவு குறைவு மற்றும் தோட்டக்கலைத்துறை மானியம் உட்பட காரணங்களால், இவ்வகை சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முகூர்த்த சீசனில், காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற அடிப்படையில், புடலங்காய் சாகுபடிக்கான நடவு செய்யப்படுகிறது.கொரோனா பரவல் காரணமாக, திருமணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பந்தல் காய்கறிகளுக்கு தேவை குறைந்து விலை சரிந்து வருகிறது. அவ்வகையில், கிலோவுக்கு, 20 ரூபாய் வரை புடலங்காய்க்கு கிடைத்து வந்த விலை, 10 ரூபாயாக குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், 'தினசரி வருமானம், குறுகிய கால பயிர், மதிப்பு கூட்டுவதற்கான வாய்ப்பு உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் பந்தல் காய்கறி சாகுபடி முறைக்கு உள்ளது. குறைந்த முதலீட்டில் பயிரிட்டு, ெஹக்டேருக்கு, 14 முதல் 15 டன் வரை மகசூல் பெறலாம்,' என்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'வட்டாரவாரியாக சீசன் சமயங்களில், பந்தல் காய்கறிகளுக்கு, விலை நிர்ணயிக்க வேண்டும். இதனால், நுகர்வோர், விவசாயிகள் என இரு தரப்பினரும், பாதிப்பிலிருந்து தப்ப முடியும். தோட்டக்கலைத்துறையினர், பந்தல் காய்கறி சாகுபடி விவசாயிகளை ஒருங்கிணைத்து, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X