பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



latest tamil news



சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.
வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.


latest tamil news



இது குறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் டிரப்ம் கூறுகையில், ''கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய், தான் இது. சீனா, கொரோனா வைரஸ் பரவாமல் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் பரவ அனுமதித்து விட்டனர். அந்த நேரத்தில் தான் நாங்கள் புதிதாக வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தோம். கையெழுத்தான மையின் ஈரம் காய்வதற்கு முன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami Sam - chidambaram ,இந்தியா
03-ஜூலை-202019:11:23 IST Report Abuse
Sami Sam எல்லா நாடுகளும் இப்படித்தான் புலம்பிக்கொண்டிருக்கிறது விரைவில் முடிவு காண முயற்சிக்கவேண்டும்
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
03-ஜூலை-202015:28:49 IST Report Abuse
Priyan Vadanad கொரோன அமெரிக்காவில் பரவுவதற்கு இவரின், மற்றவர்கள் கருத்தை ஏற்காத மனநிலையும், தான் என்கிற அகம்பாவமும் திமிரும், பணமே பெரிது, பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற மனநிலையும் காரணம் என்று பரவலாக நினைக்கின்றார்கள். சீனா மட்டுமே காரணம் இல்லை. சீனா முதல் காரணமாக இருக்கலாம். இருப்பினும் மற்ற நாட்டு அரசுகளின் கவனக்குறையும், மக்களின் அலட்சியமும் அறியாமையும்தான் காரணம் என்கிற நினைவும் இருக்கிறது.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
03-ஜூலை-202014:39:01 IST Report Abuse
g.s,rajan World war against China is inevi . g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X