பொது செய்தி

தமிழ்நாடு

'ஊரடங்கில் கொரோனா கட்டுப்படவில்லை'

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

சென்னை:''ஊரடங்கில் கொரோனா கட்டுப்படவில்லை,'' என பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறினார்.latest tamil newsரயில், பஸ் இயக்கம் காரணமாக, மதுரை, வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 10 நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படவில்லை. தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


latest tamil newsஇதுகுறித்து பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:மக்கள் அடர்த்தி நடமாட்டம் ஆகியவற்றின் காரணமாக தொற்று பரவல் அதிகரிக்கிறது.வளர்ந்த நாடுகள் அனைத்திலும் 'ஸ்பூன்' மற்றும் காகிதங்களை பயன்படுத்துகின்றனர். நம்மிடம் இயல்பாகவே கை கழுவும் பழக்கம் உள்ளது. இதனால் தான் மற்ற நாடுகளை விட குறைவான தொற்று பாதிப்பு உள்ளது.சென்னை, வேலுார், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் தீவிர கொரோனா பரவும் மாவட்டங்களாக உள்ளன.
இந்த மாவட்டங்களில் மக்கள் அடர்த்தி மட்டுமின்றி மருத்துவமனைகளும் அதிகளவில் உள்ளன. அதனால் மருத்துவமனைகளில் இருந்து நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும். இந்த மாவட்டங்களில் பொது மக்கள் கூடும் இடங்களில் கை கழுவ சோப்பு மற்றும் தண்ணீரை வைக்க வேண்டும்.மேலும் உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அவர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள முதியவர்கள் நாள்பட்ட நோயாளிகளுக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது.மற்ற 60 சதவீதம் பேருக்கு சிகிச்சையாலும் எவ்வித சிகிச்சையுமின்றியும் தானாக தொற்று குணமாகி வருகிறது. அவ்வாறு குணமடைந்தவர் உடலில் கிருமிகள் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
தற்போதைய சூழலில் ஊரடங்கால் கொரோனா கூண்டுக்குள் அடைப்பட்டது போல உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய மக்கள் வெளியே வருவதால் கொரோனா குறிப்பிட்ட காலத்தில் அதிகரிப்பதுடன் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும்.அப்போது இயல்பாகவே கொரோனா கட்டுக்குள் வரும். ஆனால் நாள்பட்ட நோயாளிகள் முதியவர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
04-ஜூலை-202016:25:08 IST Report Abuse
S.Ganesan மக்களிடம் சுய கட்டுப்பாடு இல்லாதது ஒரு முக்கிய காரணம். போதாத குறைக்கு திமுக போட்டி போட்டு கொண்டு நிவாரணம் வழங்குகிறோம் என்ற பெயரில் மக்களை கூட்டி கொரோனா விரைவில் பரவ செய்ததும் மற்றும் ஒரு முக்கிய காரணம். டாஸ்மாக் திறப்பு ,கோயம்பேடு , இறைச்சி கடைகள் திறப்பு என்று சொல்லி கொண்டே போகலாம். எல்லா சொதப்பலையும் செய்து விட்டு இப்போது கூச்சல் போடுவதில் என்ன பிரயோசனம்?
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
03-ஜூலை-202017:55:34 IST Report Abuse
Dr.C.S.Rangarajan ஊரடங்களினால் காரோண அடங்கவில்லை என்ற வாதம் ஏற்புடையதாக இருக்கமுடியாது. ஊரடங்கள் முழுமையாக செயலாக்கம் பெறாது போனது எதனால் என்றால், வீட்டுக்குளேயே நூறு நாட்கள் அடைந்துகிடந்தவர்கள் 'மன இறுக்கத்திற்கு ஆளான காரணத்தின் விளைவே அவர்கள் ஊரடங்கை முழுமையாக கறைபிடிக்க முடியாது போனதாக இருக்கக்கூடும்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
03-ஜூலை-202015:18:07 IST Report Abuse
Visu Iyer இன்னும் நான்கு வருடத்திற்கு பிறகு இது கொரனாவே இல்லை என்று சொல்லுவாங்க அதுக்குள்ள அடுத்த தேர்தல் வந்துடும்.. (கொஞ்சம் இருங்க ஓட்டு போட்டு விட்டு வந்துடறேன் ..) அப்புறம் மறுபடியும் இன்னொன்னு.. அவ்வளவு தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X